(722)
தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்
மாமதலாய் மைதிலிதன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே
ஏமருவும் சிலைவலவா! இராகவனே! தாலேலோ
பதவுரை
| தாமரை மேல் |
– |
(திருநாபிக்) கமலத்திலே |
| அயன் அவனைபடைத்தவனே |
– |
பிரமனை உண்டாக்கினவனே! |
| தயரதன் தன் மாமதலாய் |
– |
தசரதனுடைய மூத்த குமாரனே! |
| மைதிலி தன் மணவாளா |
– |
பிராட்டிக்கு வல்லபனே! |
| வண்டு இனங்கள் |
– |
வண்டுகளின் கூட்டங்கள் |
| காமரங்கள் இசைபாடும் |
– |
காமரமென்னும் இசையைப் பாடப்பெற்ற |
| கணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்திலெழுந்தருளி யிருக்கிற |
|
என் கருமணியே |
||
| ஏ மருவும் சிலைவலவா |
– |
அம்புகள் பொருந்திய (ஸ்ரீசார்ங்கமென்னும்) வில்லை ஆளவல்லவனே |
|
இராகவனே! தாலேலோ |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “தாமரைமேல் அயனவனைப் படைத்தவனே!” என்று சொல்லி “தயரதன்றன் மாமதலாய்!” என்று சொன்னவிது – ஸகல விபூதிக்கும் பிதாவாகிய நீ இவ்விபூதியில் ஒரு பிபீலிகாப்ராயனான தசரதனைப் பிதாவாகக் கொண்டு ‘அவனுடைய பிள்ளை’ என்னும்படியாக பிறந்த அதிசயம் என்கொல் என வியந்தவாறாம்.
“ஏமருவுஞ்சிலை” = ஏ – எய்கையிலே, மருவும் – மூட்டாநின்ற, சிலை – வில் என்றும் பொருளாகலாம். ஆரேனும் பிடிக்கிலும் எய்கையிலே மூட்டும் வில் என்பது கருத்து. வெகு சாதுரியமாய் அடக்கி ஆளத்தக்க வில் – என்றவாறு இக்கருத்துத் தோன்றவே பெரியாழ்வாரும் சார்ங்கமென்னும் வில் ஆண்டான் றன்னை என்றருளிச் செய்தாரென்க.
English Translation
Sleep, O wielder-of-the-terrible-bow, Raghava, Talelo! O Dark-gem-Lord of Kannapuram where bumble-bees hum songs on Panns! You are the eldest son of the illustrious Dasaratha; you created Brahma on a lotus.
