(721)
கொங்குமலிகருங்குழலாள் கௌசலைதன்குலமதலாய்*
தங்குபெரும்புகழ்ச்சனகன் திருமருகா! தாசரதீ*
கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென்கருமணியே*
எங்கள் குலத்தின்னமுதே இராகவனே! தாலேலோ.
பதவுரை
| கொங்குமலி கருகுழலாள் |
– |
பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலையுடையளான |
| கௌசலை தன் |
– |
கௌஸல்யையினுடைய |
| குலம் மதலாய் |
– |
சிறந்த பிள்ளையானவனே! |
| தங்கு பெருபுகழ் சனகன் |
– |
பொருந்திய மஹாகீர்த்தியையுடைய ஜநக மஹாராஜனுக்கு |
| திரு மருகா |
– |
மாப்பிள்ளை யானவனே! |
| தாசரதீ |
– |
சக்ரவர்த்தி திருமகனே! |
| கங்கையிலும் |
– |
கங்காநதியிற் காட்டிலும் |
| மலி தீர்த்தம் |
– |
சிறப்பு மிக்க தீர்த்தங்களையுடைய |
| கணபுரத்து |
– |
திருக்கண்ணபுரத்திலெழுந்தருளியிருக்கிற |
|
என் கருமணியே |
||
| எங்கள் குலம் |
– |
எங்கள் ராஜவம்சத்துக் கெல்லாம் |
| இன் அமுதே |
– |
போக்யமான அமுதம் போன்றவனே! |
|
இராகவனே! தாலேலோ |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எங்கள் குலத்து இன்னமுதே – ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல இக்குல சேகராழ்வாரும் ராஜவம்ஸத்திற் பிறந்தவராதலால் இங்ஙனமருளிச் செய்தாரென்க.
English Translation
Sleep, Sweet nectar, our tutelary deity, Raghava, Talelo, my Dark-gem-Lord of Kannapuram with rivers holier than the Ganga! You are the son of Dasaratha, son-in-law of Janaka -king of lasting fame. You are the emancipator of the lineage of fragrant dark-coiffured Queen Kousalya.
