(720)
புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே
திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்
கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே
எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ
பதவுரை
| புண்டரிகம் மலர் அதன் மேல் |
– |
(திருநாபியில் அலர்ந்த) தாமரைப்பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக) |
| புவனி எல்லாம் படைத்தவனே |
– |
உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே! |
| திண் திறலாள் தாடகைதன் |
– |
த்ருடமான பலத்தையுடையளான தாடகையினுடைய |
| உரம் உருவ |
– |
மார்வைத் துளைக்கும்படியாக |
| சிலை வளைத்தாய் |
– |
வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே! |
| கண்டவர் |
– |
ஸேவித்தவர்கள் |
| தம் மனம் வழங்கும் |
– |
தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த |
|
கணபுரத்து என் கருமணியே; |
||
| எண் திசையும் |
– |
எட்டுத்திக்கிலுள்ளவர்களையும் |
| ஆள் உடையாய் |
– |
அடிமை கொண்டருளுபவனே! |
| இராகவனே! தாலேலோ |
– |
ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு |
English Translation
Sleep, O Lord of the eight Quarters, Talelo! My Dark-gem-Lord of Kanriapuram! You shot an arrow that pierced strong Tataka’s chest, you created the world on a lotus flower, you steal the hearts of those who see you!
