(719)

(719)

மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ

பதவுரை

மன்னுபுகழ்

–

நிலை நின்ற புகழையுடைய
கௌசலை தன்

–

கௌஸல்யையினுடைய்
மணி வயிறு

–

அழகிய வயிற்றிலே
வாய்த்தவனே

–

பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென் இலங்கை கோன்

–

தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய
முடிகள்

–

பத்துத் தலைகளையும்
சிந்துவித்தாய்

–

சிதறப் பண்ணினவனே!
செம் பொன் சேர்

–

செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்
கன்னி

–

அழிவில்லாததாய்
நல்

–

விலக்ஷணமாய்
மா

–

பெரிதான
மதில்

–

திருமதிளாலே
புடை சூழ்

–

நாற்புறமும் சூழப்பட்ட
கணபுரத்து

–

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே

–

நீலரத்நம் போன்ற எம்பெருமானே!
என்னுடைய இன்அமுதே

–

எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
இராகவனே!

–

ஸ்ரீராமனே!
தாலேலோ

–

(உனக்குத்) தாலாட்டு

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதில், முதலடியால் அவதாரமும், இரண்டாமடியால் அவதார ப்ரயோஜநமும் சொல்லப்பட்டன வென்க. கணபுரம் – கண்ணபுரம் என்பதன் தொகுத்தல், திருக்கண்ணபுரம் என்னும் இத்திவ்யதேசம் சோழநாட்டுத் திருப்பதிகள் நாற்பதில் ஒன்று. இத்தலத்தில் சௌரிராஜப்பெருமாள் மிகவும் வரப்ரஸாதி என்பது ப்ரஸித்தம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வர் ஆகிய ஐவர்களால் மங்களாசாஸநஞ் செய்யப்பெற்ற சிறந்த திவ்யதேசம் இது. தாலேலோ – வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்; தால் – நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத்தமிழில் இத்தாலாட்டை எட்டாம் மாதத்திற் கூறுவது கவிமரபு.

English Translation

Sleep, my sweet child Raghava, Talelo! My Dark-gem-Lord of Kannapuram, surrounded by high stone walls inlaid with gold! You are the jewel of the precious womb of world-famous Kousalya. You severed the heads of Lanka’s king Ravana.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top