(720)

(720)

புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே

திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தாய்

கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே

எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ

பதவுரை

புண்டரிகம் மலர் அதன் மேல்

–

(திருநாபியில் அலர்ந்த) தாமரைப்பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக)
புவனி எல்லாம் படைத்தவனே

–

உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே!
திண் திறலாள் தாடகைதன்

–

த்ருடமான பலத்தையுடையளான தாடகையினுடைய
உரம் உருவ

–

மார்வைத் துளைக்கும்படியாக
சிலை வளைத்தாய்

–

வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே!
கண்டவர்

–

ஸேவித்தவர்கள்
தம் மனம் வழங்கும்

–

தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த

கணபுரத்து என் கருமணியே;

எண் திசையும்

–

எட்டுத்திக்கிலுள்ளவர்களையும்
ஆள் உடையாய்

–

அடிமை கொண்டருளுபவனே!
இராகவனே! தாலேலோ

–

ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு

English Translation

Sleep, O Lord of the eight Quarters, Talelo! My Dark-gem-Lord of Kanriapuram! You shot an arrow that pierced strong Tataka’s chest, you created the world on a lotus flower, you steal the hearts of those who see you!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top