(695)

(695)

தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே

புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்

மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்

புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே

பதவுரை

மிக்கு இலங்கு

–

மிகுதியாய் விளங்குகிற
முகில்

–

காளமேகம் போன்ற
நிறத்தாய்

–

கரியதிருநிறமுடையவனே!

வித்துவக்கோடு அம்மா!

புண்ணியனே

–

புண்ய ஸ்வரூபியாயுள்ளவனே!
தொக்கு இலங்குயாறு எல்லாம்

–

(ஜலப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம்
பரந்து ஓடி

–

(கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்)
தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத

–

ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்கமாட்டா;
அவை போல்

–

அவ்வாறுகள் போல,
புக்கு இலங்கு

–

(என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற
சீர் அல்லால்

–

(உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்)
புக்கிலன்

–

ஆழ்ந்திடேன்.

English Translation

O Radiant cloud-hued Lord of Vittuvakkodu! O Holy One! See, I have no refuge other than your benevolent grace; just as rivers flow far and wide, but they all finally empty into the ocean, never elsewhere.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top