(695)
தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே
புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்
மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்
புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே
பதவுரை
மிக்கு இலங்கு |
– |
மிகுதியாய் விளங்குகிற |
முகில் |
– |
காளமேகம் போன்ற |
நிறத்தாய் |
– |
கரியதிருநிறமுடையவனே! |
வித்துவக்கோடு அம்மா! |
||
புண்ணியனே |
– |
புண்ய ஸ்வரூபியாயுள்ளவனே! |
தொக்கு இலங்குயாறு எல்லாம் |
– |
(ஜலப்ரவாஹம்) திரண்டு விளங்குகிற நதிகளெல்லாம் |
பரந்து ஓடி |
– |
(கண்டவிடமெங்கும்) பரவியோடி (முடிவில்) |
தொடு கடலே புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத |
– |
ஆழ்ந்த கடலிலே சென்று சேர்ந்தல்லது மற்றோரிடத்தே புகுந்து நிற்கமாட்டா; |
அவை போல் |
– |
அவ்வாறுகள் போல, |
புக்கு இலங்கு |
– |
(என் நெஞ்சினுள்ளே) புகுந்து விளங்குகிற |
சீர் அல்லால் |
– |
(உனது) கல்யாண குணங்கள் தவிர (மற்றோரிடத்தில்) |
புக்கிலன் |
– |
ஆழ்ந்திடேன். |
English Translation
O Radiant cloud-hued Lord of Vittuvakkodu! O Holy One! See, I have no refuge other than your benevolent grace; just as rivers flow far and wide, but they all finally empty into the ocean, never elsewhere.