(696)
நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே
நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே
பதவுரை
மின்னையே சேர்திகிரி |
– |
மிக்க ஒளியையே கொண்டுள்ள சக்கராயுதத்தையுடைய |
வித்துவக்கோடு அம்மா!-; |
||
நின்னையே வேண்டி |
– |
உன்னையே விரும்பி |
நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே |
– |
மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே |
தான் வேண்டும் |
– |
தானாகவே வந்து சேர விரும்புகிற |
செல்வம் போல் |
– |
அந்த ஐச்வரியம் போல, |
மாயத்தால் |
– |
(உன்) மாயையினால் |
(நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும்) |
||
அடியேன் |
– |
உனது அடியவனான நான் |
நின்னையே வேண்டி நிற்பன் |
– |
உன்னையே அடைய விரும்பி நிற்பேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- யாவனொருவன் எம்பெருமானிடத்திலே அன்பைச் செலுத்தி அதனால் ஐச்வர்யத்தை உபேக்ஷிக்கிறானோ, அவன் உபேக்ஷிக்க உபேக்ஷிக்க அவனது நல்வினைப்பயனால் அச்செல்வம் அவனை விடாது விரும்பி வலியத் தொடர்ந்து சேர்தல் இயல்பு. (அபேக்ஷிப்பவனுக்குக் கிடையாதொழிதலும், அபேக்ஷியாதவனுக்கு வலிவிலே கிடைத்தலும் பகவத் ஸங்கல்ப மஹிமையென்பது இங்கு அறியத்தக்கது). அது போலவே, நீ உன் உடைமையாகிய என்னை உபேக்ஷிக்க உபேக்ஷிக்க நான் உன்னையே விடாது நிற்பேன் என்றவாறு. அடியார்களுக்கு நேரும் துன்பங்களைப் போக்கி எங்களைக் காப்பதற்காகவே கையுந் திருவாழியுமாக இங்கே வந்துள்ளாய் நீ என்பது மூன்றாமடியின் உட்கருத்து.
இப்பாட்டு விஷயத்தில் வேதாந்த தேசிகனுடைய கருத்து – செல்வத்தை வெறுத்து எம்பெருமானையே வேண்டி நிற்பவனுக்கு அச்செல்வம் தானே வந்து சேர்தல் பொருந்தாதாதலால், இப்பாட்டில் அங்ஙனம் கூறியுள்ளதை, முன்பு நெடுங்காலம் ஐச்வர்யத்துக்காக உபாஸகை பண்ணி அது பெறாமல் அதனை வெறுத்து எம்பெருமான் பக்கல் அன்பு பூண்ட ஒரு அதிகாரி விஷயமாகக் கொள்ளுதல் நலம் என்பதாம். செல்வம் என்பதற்கு ”மோக்ஷலக்ஷ்மி ” என்றுரைப்பாரும் உளர்.
English Translation
O Lord of Vittuvakkodu wielding the radiant discus! Just as the wealth renounced by me in my search for you keeps coming back to me, I keep returning to serve you alone.