(694)
எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்
மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்
டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே
பதவுரை
வித்துவக்கோடு அம்மா!; |
||
வான் |
– |
மேகமானது |
எத்தனையும் வறந்த காலத்தும் |
– |
எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும் |
பைங் கூழ்கள் |
– |
பசுமை தங்கிய பயிர்கள் |
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும் |
– |
கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்; |
அவை போல் |
– |
அப்பயிர்கள் போல. |
மெய் துயர்வீட்டா விடினும் |
– |
தவறாது அனுபவிக்கப்படுகிற என் துன்பங்களை நீ போக்காமல் உபேக்ஷித்தாலும் |
அடியேன் |
– |
உனக்கு தாஸனாகிய நான் |
என் சித்தம் உன் பாலே மிக வைப்பன் |
– |
என் மநஸ்ஸை உன்னிடத்திலேயே |
மிகவும் செலுத்துவேன். |
English Translation
O Lord of Vittuvakkodu! Even if you do not save me from despair I, this devotee-self, will place my heart on you alone; just as even if the monsoon fails to deliver rain, the withering crops look to the grey clouds alone.