(693)

(693)

செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்

அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்

வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்

அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே

பதவுரை

வித்துவக்கோடு அம்மா!;

செம் தழலே வந்து

செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து
அழலை செய்திடினும்

வெப்பத்தைச் செய்தாலும்
செம் கமலம் அந்தரம் சேர்வெம்

செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய
கதிரோற்கு அல்லால்

கிரணங்களையுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது.
அலரா

(நெருப்புக்கு) மலரமாட்டா;
வெம் துயர்

அநுபவித்தே தீரவேண்டியவையான கொடிய (என்) பாவங்களை
வீட்டா விடினும்

தீர்த்தருளா தொழிந்தாலும்
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால்

உனது எல்லையில்லாத உத்தம குணங்களுக்கே யல்லாமல்
அகம் குழையமாட்டேன்

(வேறொன்றுக்கு நான்) நெஞ்சுருக மாட்டேன்.

English Translation

O Lord of Vittuvakkodu! Even if you do not save me from despair, my heart melts for your grace alone. Alas, I am like the lotus flower that opens to the rays of the rising Sun, whose very heat in the day makes it wither.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top