(669)

(669)

நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்

ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்

ஆலியா அழையா அரங்கா வென்று

மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே

பதவுரை

நூலின் நேர்

–

நூல் போன்று (ஸூக்ஷ்மமான) இடையையுடைய பெண்டிர் விஷயத்திலேயே பொருந்தியிருக்கிற
ஞாலம் தன்னொடும்

–

(இந்த) ப்ராக்ருத மனிதரோடு

யான் கூடுவது இல்லை;-

ஆலியா

–

(காதலுக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடி
அரங்கா என்று

–

‘ஸ்ரீரங்கநாதனே!’ என்று கூப்பிட்டு
அழையா

–

கூப்பிட்டு
என் தன் மாலுக்கே

–

என்மேல் வ்யாமோஹமுடையனான எம்பெருமான் திறத்தினாலேயே

மால் எழுந்தொழிந்தேன் – மோஹமுற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆலியா, அழையா=‘செய்யா’ என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம், ஆலித்து அழைத்து என்றபடி

English Translation

My love for the Lord grows day by day. Nor can I join the people of the world who pursue dames with thin waists. I sing and dance and call, “Aranga!” madly in love with my own sweet Lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top