(668)

(668)

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்

இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான்

ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்

மையல் கொண்டொழிந் தேனென்றன் மாலுக்கே

பதவுரை

மெய்யில் வாழ்க்கையை

–

ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே
மெய் என கொள்ளும்

–

பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவையம் தன்னொடும்

–

இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை

–

(இனி) நான் சேர்வதில்லை
ஐயனே

–

‘ஸ்வாமீ’
அரங்கா

–

‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்

–

என்று (பகவந்நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன்மாலுக்கே

–

என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன்

–

வ்யாமோஹடைந்திட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மெய்யில் வாழ்க்கை =  மெய்  இல் என்று பிரித்து, பொய்யாகிய வாழ்வை எனறலுமாம்.

English Translation

I cannot mix with people of the world who consider this corporeal life as real. ”My Lord!”, “My Aranga!” is all I can say. I swoon with infatuation for my Lord Mal.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top