(670)

(670)

மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்

பாரி னாரொடும் கூடுவ தில்லையான்

ஆர மார்வ னரங்க னனந்தன்நல்

நார ணன்நர காந்தகன் பித்தனே

பதவுரை

மாரனார்

–

மன்மதனுடைய
வரிவெம் சிலைக்கு

–

அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும்

–

ஆட்பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும்

–

(இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு

யான் கூடுவது இல்லை-:

ஆரம் மார்வன்

–

முக்தாஹாரத்தைத்  திருமார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன்

–

அளவிடமுடியாத ஸ்வரூபஸ்வ பாவங்களையுடையவனாய்
நல் நாரணன்

–

ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன்

–

அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
அரங்கன்

–

ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன்

–

மோஹமுடையனாயிரா நின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நரகாந்தகன்-நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.

English Translation

Nor indeed can I be a subject under the sweet bow of the king-of-love Karma. I am mad for my jeweled Aranga, my eternal Lord Narayana, the destroyer of Hell.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top