(372)

(372)

சீயினால் செறிந்தேறிய புண்மேல் செற்ற லேறிக் குழம்பிருந்து எங்கும்

ஈயினால்அரிப் புண்டு மயங்கி எல்லை வாய்ச்சென்று சேர்வதன் முன்னம்

வாயி னால்நமோ நாரணா வென்று மத்த கத்திடைக் கைகளைக் கூப்பி

போயினால் பின்னை இத்திசைக்கு என்றும் பிணைக்கொ டுக்கிலும் போகவொட் டாரே.

பதவுரை

சீயினால்

சீயாலே
செறிந்து எறிய

மிகவும் நிறைந்த
புண்மேல்

புண்ணின்மேல்
செற்றல் ஏறி

ஈ இருந்து முட்டையிட்டு
குழம்பிருந்து

அலைபுழுத்து சீராய்ப்பாயுமளவில்
எங்கும்

உடல் முழுதும்
ஈயினால்

ஈயாலே
அரிப்புண்டு

அரிக்கப்பட்டு
மயங்கி

(வேதனை பொறுக்க முடியாமல்) மூச்சை யடைத்து
எல்லை வாய்ச் சென்று சேர்வதன் முன்னம்

சாமகாலத்தைக் கிட்டுவதற்கு முன்னே
வாயினால்

வாயாலே
நமோ நாராணா என்று

‘நமோ நாராயணாய்’ என்று சொல்லிக்கொண்டு
மத்தகத்திடை

உச்சியிலே
கைகளைக் கூப்பி

அஞ்ஜலிபண்ணி

சுசீர லியோகமான பின்பு)

போயினால்

(பரமபதம்) போய்ச்சேர்ந்தால்
பின்னை

பிறகு
பிணைக் கொடுக்கிலும்

(நித்யமுக்தர்கள்) ‘நாங்கள் உத்தரவாதம் பண்ணுகிறோம்’

என்றாலும்.

என்றும்

ஒருகாலும்
போக ஒட்டார்

(இந்த முக்தர்களைப்) போகவொட்டார்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “தீண்டாவழும்புஞ் செந்நீருஞ் சீயுநரம்புஞ் செறிதசையும் வேண்டாநாற்றமிகு முடலை” என்ற ஐயங்கார் பாசுரத்தின்படி- பற்பல அஸஹ்யங்களுக்கு ஆகாரமான இவ்வுடம்பின் வேதனைக்கனத்தினால் மயக்கமுற்று மரணமடைவதற்கு முன், வாயாலே திருவஷ்டாக்ஷரத்தை அநுஸந்தித்துக் கொண்டு முடிமேல் கைகூப்பித் தொழுமவர்கள் பரமபதம்போய்ச் சேருவர்களென்பதில் இதையும் ஐயமில்லை; அப்படி அவர்கள் அங்குப்போய்ச் சேர்ந்த பின்னர் “இவர்கள் இரண்டு நாளைக்குப் பூமண்டலத்தில் இருந்து வரட்டும்; மீண்டு வருவர்களோ என்று சில நித்யஸூரிகள், தங்களை ஈடு கட்டினாலும், அவர்களை அவ்விடத்திலிருந்து இந்தப் பிரகிருதி மண்டலத்துக்கு அனுப்பவல்லார் யாருமில்லையென்கிறார்; இதனால்  ஒழிவில் காலமெல்லா முடனாய்மன்னி. வழுவிலாவடிமை செய்யப்பெறுவர் என்றவாறு. “இத்தால், கர்மமடியாக மீட்சியில்லையென்றபடி” என்ற வியாக்கியாநவாக்கியமும் அறியத்தக்கது.

நாரணா – சிதைவு. மத்தகம்- ????????    திசை-?????????     புணைக்கொடுக்கிலும் என்றும் பாடமென்பர்   அது, மோனைன்பத்துக்குச் சேர்ந்திருக்கும். பிணைக் கொடுத்தல் ஈடுகாட்டுதல் (ஜாமீன்தார்ராய் நிற்றல்) ????????????????????? போகவொட்டாரே என்ற  வினைக்கு எழுவாய் வருவிக்கவேண்டும்  பரமபதநாதனுக்கு  மந்திரிகளாயிருப்பவர்கள் போகவொட்டார் என்னலாம்.

English Translation

Pus will ooze from festers, maggots will wriggle on bed sores all over, ants will bite and the mind will slip into coma, when the last moments arrive. Before that happens, join your hands over your head and chant Namo-Narayana. Go, and you will never come again this way, guaranteed.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top