(373)

(373)

சோர்வினால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து

ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்தக் காலம்அடைவதன் முன்னம்

மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி

ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே.

பதவுரை

சோர்வினால்

கனவு வழியாலே
பொருள் வைத்தது

(எங்கேனும் ஏதாவதொரு) பொருள் வைக்கப்பட்டிருக்குமாகில்
சொல்லு சொல் என்று

(அதைச்) செல்லு, சொல்லு என்று
சுற்றும்  இருந்து

சூழ்ந்து கொண்டு
ஆர்வினவிலும்

எப்படிப்பட்ட அன்பர்கள் கேட்டாலும்
வாய் திறவாதே

(அவர்களுக்கு மறுமாற்றம் சொல்லுகைக்கும்) வாயைத் திறக்கமாட்டாதபடி.
அந்தக் காலம்

மரணகாலமானது
அடைவதன் மூலம்

வந்து கிட்டுவதற்கு முன்னே;
மார்வம் என்பது

‘ஹ்ருதயம்’ என்கிற
ஓர் கோயில்

ஒரு ஸந்நிதியை
அமைத்து

ஏற்படுத்தி (அந்த ஸந்நிதியில்)
மாதவன் என்னும்

‘திருமால்’ என்கிற
தெய்வத்தை

தேவதையை
நாட்டி

எழுந்தருளப்பண்ணி (அத் தெய்வத்தைக் குறித்து)
ஆர்வம்மென்பது

பக்தி என்கிற
ஓர் பூ

ஒரு புஷ்பத்தை
இடவல்லார்க்கு

ஸமர்பிக்க வல்லவர்களுக்கு
அரவதண்டத்தின்

யமபடர்களால் வரும் துன்பத்தில்னின்றும்
உய்யலும் ஆம்

தப்பிப் பிழைக்கலாகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- துணையுஞ்சார்வுமாகுவார்போற் கற்றத்தவர் பிறரும், அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள் போற் சுவைப்பர்” என்றபடி  இவன் கையிலிருந்தவற்றை ஒன்றுமிகாதபடி பறித்துக்கொண்ட பந்துக்கள் வந்து சூழ்ந்து கொண்டு, “எங்களுக்குத் தெரியாமல் எந்த மூலையிலாவது ஏதாகிலுமொரு பொருள் வைத்துண்டாகில், அதை எமக்குச் சொல்லு” என்று பலவாறு நிர்ப்பந்தித்துக் கேட்டால், அவர்களுகுக்கு மறமொழிச் சொல்லவும் மாட்டாதபடி  மரணகாலம் வந்து கிட்டுவதற்கு முன்னமே, எம்பெருமானை நெஞ்சில் நிறுத்தி அன்பு பூண்டிருக்கவல்லவர்கள், யமகிங்கரர்களுடைய ஹிம்ஸைகளுக்குத் தப்பிப் பிழைப்பர்களென்கிறார்.

சோர்வு- மறதியும், களவுமாம். ஆர்வினவிலும்- இளையான் கேட்டாலும் என்க. அந்தக் காலம் *** அரவதண்டத்தில்- ஐந்தாம்வேற்றுமை; ஏழாம் வேற்றுமையன்று. முதலடியில் “கற்றுமிருந்தார்” என்ற பாடமுமுண்டு. (கூ)

English Translation

If you have amassed wealth, relatives will surround you and ask, “Tell us, tell us”, but amnesia will prevent you from answering anyone. Before that happens, make your heart the Lord’s temple, install the name Madhava as its deity, and worship him with the flower called love. For those who can, yes, there is escape from the punishment of Yama’s agents.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top