(371)

(371)

ஆசை வாய்ச்சென்ற சிந்தைய ராகி அன்னை அத்தன்என் புத்திரர் பூமி

வாச வார்குழ லாளென்று மயங்கி மாளு மெல்லைக்கண் வாய்திற வாதே

கேச வாபுரு டோத்தமா என்றும் கேழ லாகிய கேடிலீ என்றும்

பேசு வாரவர் எய்தும் பெருமை பேசு வான்புகில் நம்பர மன்றே.

பதவுரை

ஆசைவாய்

(தனக்கு) ஆசையுள்ள விதத்திலே
சென்ற

போர்ப் பாரத்த
சிந்தையார் ஆகி

நெஞ்சையுடையாராய் கொண்டு
என் அன்னை

என்னுடைய தாய்
என் அத்தன்

என்னுடைய தகப்பன்

என் புத்திரர் என்னுடைய பிள்ளைகள்

என் பூமி

என்னுடைய நிலம்
வாசம்வார்

பரிமளம் வீசுகின்ற
என் குழலை

கூந்தலையுடையவளான என் மடினைtவவி
என்று

என்று சொல்லிக்கொண்டு
மயங்கி

(அவர்கள் பக்கத்தில்) மோஹமடைந்து

(பழூதே பல பகலும் போக்கினாலும்)

மாளும் எல்லைக்கண்

சரமஸமயத்தில்
வாய்திறவாதே

வாய்திறந்து(அவர்கள் பேச்சை)                                                                        சொல்லியழையாமல்
கேசவா என்றும்

கேசவனே என்றும்
புருடோத்தமா என்றும்

புருடோத்தமனே என்றும்
கேழல் ஆகிய கேடு இலீ என்றும்

‘வராஹரூபியாய்

அவதரித்தவனும் அழிவில்லாதவனுமான எம்பெருமானே! என்றும்

பேசுவார் அவர்

சொல்லுவார்கள்
எய்திய

அயைடக்கூடிய
பெருமை

பெருமைகளே
பேசுவான் புகில்

பேசப்புக்கால்
நம்பரம் அன்று

நம்மால் பேசித் தலைகாட்டப் போவது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஹங்காரமமகாரங்களை வளரச்செய்யக் கடவதான ஸம்ஸாரத்தில் ஆழங்காற்பட்டுப் பழுதே பலபகல்களைப் போக்கினாலும், உயிர் முடியுமளவிலாகிலும் அந்தஸம்ஸாரத்தில் நெஞ்சைச்செலுத்தாது எம்பெருமான் திருநாமங்களை வாய்விட்டுச் சொல்லுமவர்கள் மேலுலகத்திற் பெறும் பரிசுகளைச் சொல்லித் தலைக்கட்ட யாம் வல்லரல்லோ மென்கிறார். வாழ்நாள் முழுவதையும் பகவந்நாமஸ்ங்கீர்த்தநத்தாலேயே போக்கினவர்கள் பெறும் பெருமையை எம் பெருமான்றானும் பேசித் தலைக்கட்டவல்லனல்லனென்பது வெளிப்படை “என்றுமயங்கி வாய்திறவாதே மாளுமெல்லைக்கண்” என இயைத்து, அம்மா, அண்ணா, பிள்ளை, பூமி, பெண்டாடி என்று சொன்னதும் மூர்ச்சையடைந்து, அவரகள் பேரைச்சொல்லி யழைக்கவும் மாட்டாமல் மாள்வதற்குள் என்று பொருளுரைப்பாருமளர்.    ….    …. (க)

English Translation

At the time of death, instead of engaging the mind in transient attachments and calling, “O my Mother!”, “My Father!”, “My Son!”, “My Lands” and “My Fragrant-tressed Wife!” there are those who recite “Kesava!”, “Purushottama!”, and “Faultless-one-who-came-as-a-boar!” To speak of the greatness of such men is beyond us.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top