(370)
சீதநீர்புடை சூழ்செழுங்கழ னியுடைத்திருக் கோட்டியூர்
ஆதியானடி யாரையும்அடி மையின்றித்திரி வாரையும்
கோதில்பட்டர் பிரான்குளிர்புது வைமன்விட்டு சித்தன்சொல்
ஏதமின்றிஉ ரைப்பவர் இருடீகேசனுக் காளரே.
பதவுரை
| சீதம்நீர் |
– |
குளிர்ந்த நீராலே |
| படைசூழ் |
– |
சுற்றும் சூழப்பெற்ற |
| செழு |
– |
செழுமை தங்கிய |
| கழனி உடை |
– |
கழனிகளையுடைய |
| திருக்கோட்டியூர் |
– |
திருக்கோட்டியூரில் (எழுந்தருளியிருக்கிற) |
| ஆசியான் |
– |
எம்பெருமானுக்கு |
| அடியாரையும் |
– |
அடிமை செய்யும் பாகவதர்களையும் |
| அடிமை இன்றி |
– |
அடிமை செய்யாமல் |
| திருவாரையும் |
– |
திரிகின்ற பாவிகளையும் குறித்து, |
| கோத இல் |
– |
குற்றமற்றவரும் |
| பட்டர்பிரான் |
– |
அந்தணர்கட்குத் தலைவரும் |
| குளிர |
– |
குளிர்ந்த |
| புதுவை |
– |
ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு |
| மண் |
– |
நிர்வாஹாருமான |
| விட்டு சித்தன் |
– |
பெரியாழ்வார் |
| சொல் |
– |
அருளிச்செய்த இப்பாசுரங்களை |
| ஏதும் இன்றி |
– |
பழுதில்லாதபடி |
| உரைப்பவர் |
– |
ஓதுமவர்கள் |
| இருடீகேசனுக்கு |
– |
எம்பெருமானுக்கு |
| ஆளர் |
– |
ஆட்செய்யப்பெறுவர் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-திருக்கோட்டியூரெம்பெருமானுக்கு அடிமை செய்யும் பாகவதர்களைப் புகழ்ந்தும், அடிமை செய்யாது விஷயங்களிலே மண்டித்திரியும் பாவங்களை இழந்தும் அருளிச்செய்த இவற்றை ஓதவல்லபிராக்கள் எம்பெருமானுக்கு நித்யகைங்கரியம் பண்ணப்பெறுவர்களென்று பலஞ்சொல்லிக்கட்டியவாறு. சீதம்- வடசொல்திரிபு. ஆதியன்- முதல்வன். புதுவைக்குக் குளிர்த்தியாவது- ஸம்ஸாரதாபங்களை ஆற்றுக. … ….
அடிவரவு:- நா குற்றம் வண்ணம் உரகம் ஆமை பூதம் குருந்தம் நளிர்ந்த கொம்பினை காசின் சீதரீர் ஆசை.
English Translation
This decad of songs about the devotees of the first-Lord of Tirukkottiyur surrounded by cool waters and fertile fields, and about those who wander with out devotion, is by faultless Pattarbiran, Vishnuchitta, Lord of Srivilliputtur. Those who recite it flawlessly will be servants of Hrisikesa.
