(348)
மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலைதன்னை
கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம் மான்தன்னை
விரதம்கொண் டேத்தும் வில்லிபுத் தூர்விட்டு சித்தன்சொல்
கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே.
பதவுரை
| மருதம் பொழில் |
– |
மருகஞ்சோலைகளை |
| அணி |
– |
அலங்காரமாகவுடைய |
| மாலிருஞ்சோலைமலைதன்னை |
– |
திருமாலிருஞ்சோலை மலையை |
| கருதி |
– |
விரும்பி |
| உறைகின்ற |
– |
(அதில்) எழுந்தருளியிருக்கின்ற |
| கார் கடல் வண்ணன் |
– |
கருங்கடல்போன்ற நிறத்தையுடைய |
| அம்மான் தன்னை |
– |
அழகப்பிரனாரை |
| விரதம் கொண்டு |
– |
மங்கள *** |
|
– |
விரதமாகக்கொண்டு | |
| ஏந்தும் |
– |
துதிக்குமாறும் |
| வில்லிபுத்தூர் |
– |
ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான |
| விட்டுசித்தன் |
– |
பெரியாழ்வார். |
| சொல் |
– |
அருளிச்செய்த இவற்றை |
| கருதி |
– |
விரும்பி |
| உரைப்பவர் |
– |
ஓதமவர்கள் |
| கண்ணன் |
– |
கண்ணபிரானுடைய |
| கழல் இணை |
– |
திருவடிகளை |
| காண்பர்கள் |
– |
ஸேவிக்கப்பெறுவார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழிகற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டுகிறார், இப்பாட்டால், மருதப்பொழில்- அர்ஜுகவ்ருக்ஷங்கள். விரதம் கொண்டு- திருப்பல்லாண்டு பாடுகை என்றிறே பெரியாழ்வாருடைய விரதம்… (கக)
English Translation
These are songs by Srivilliputtur’s Vishnuchitta, who vows worship to the dark ocean-hued lord residing in the midst of forest groves of Malirumsolai hill. Those who love to sing them will see the feet of Krishna
