(235)
பற்று மஞ்சள்பூசிப் பாவை மாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்துஎங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன்றின்பின்
எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.
பதவுரை
| பாடியில் |
– |
திருவாய்ப் பாடியில் |
| பற்று மஞ்சள் பூசி |
– |
பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனியெங்கும் பெண்கள் கையால் தனித்தனியே) பூசப்பெற்று, |
| சிற்றில் சிதைத்து |
– |
(அப்பெண்கள் இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி) |
| எங்கும் |
– |
எல்லாவிடங்களிலும் |
| தீமை செய்து |
– |
தீம்புகளைச் செய்து கொண்டு |
| பாவை மாரொடு |
– |
அவ்விடைப் பெண்களோடே |
| திரியாமே |
– |
திரியவொட்டாமல், |
| கன்று |
– |
கன்றுகளினுடைய |
| தூளி உடை |
– |
தூள்களையுடைத்தாய் |
| வேடர் |
– |
(அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக்கிருப்பிடமான |
| கான் இடை |
– |
காட்டிலே |
| கன்றின் பின் |
– |
கன்றுகளின் பின்னே (திரியும்படியாக) |
| என் பிள்ளையை |
– |
என் மகனை |
| ஏற்றுக்கு போக்கினேன் |
– |
ஏதுக்காக அனுப்பினேன்! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சளரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதைப் பரீக்ஷிப்பதற்காகக் கண்ணபிரானுடைய கரிய திருமேனியிலே பூசிப்பார்ப்பார்களாம்; ஆதலால் அம்மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பேர் பெற்றது. [கற்றுத்தூளி யித்யாதி.] கன்றுகள் திரள் நுகைத்துக் கிளப்பின தூள்கள் காடெங்கும் பாக்குமாதலால் கண்ணபிரானுடைய பொன் போல் மஞ்சனமாட்டின மேனி நிறம் மழுங்குமேயென்று வயிறெரிகின்றனள்.
English Translation
With bath-turmeric smeared all over, he would go around kicking the sand castles of girls, and make mischief everywhere. Instead, I sent him into the hunter’s forest covering him with the dust of grazing calves. O why did I do such a wicked thing?
