(236)

(236)

நன்மணி மேகலை நங்கை மாரொடு நாள்தொறும்

பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே

கன்மணி நின்றதிர் கா னதரிடைக் கன்றின்பின்

என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

என்

என் மகனான
மணிவண்ணனை

நீலமணிபோன்ற வடிவையுடைய கண்ணனை,
நல்

லோகோத்தரமான
மணி

நவமணிகள் பதித்த
மேகலை

மேகலையை (அணிந்துள்ள)
நங்கைமாரொடு

யுவதிகளோடு கூட
நாள் தொறும்

தினந்தோறும்
பொன் மணி மேனி

அழகிய நீலமணிபோன்ற திருமேனியானது
புழுதி ஆடி

புழுதிபடைக்கப்பெற்று(விளையாடி)
திரியாமே

திரியவொண்ணாதபடி
கான்

காட்டிலே

(இவன் கன்றுகளை அழைக்கிற த்வநியாலும், அவை கூவுகிற த்வநியாலும்)

கல்

மலையிலே
மணி நின்று அதிர்

மணியினோசைபோல பிரதித்வநி யெழும்பப் பெற்றுள்ள (பயங்கரமான)
அதர் இடை

வழியிலே

(வருந்தும்படியாக)

கன்றின் பின்

கன்றுகளின் பின்னே
போக்கினேன்

போகவிட்டேனே!

எல்லே பாவமே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என் கண்ணபிரான் தானுகந்த பெண்களோடுகூடித் திருமேனி புழுதிபடியும்படி யதேச்சமாக விளையாடிக்கொண்டு இச்சேரியிலேயே திரிந்து கொண்டிருந்ததைத் தவிர்த்துக் கொடிய காட்டுவழியிலே போகவிட்டேனே பாவியேனென்று பரிதபிக்கின்றான். ’கல்’ என்ற சொல் இலக்கணையால் மலையை உணர்த்திற்று. கண்ணபிரான் காட்டுவழியிற் போம்போது இவன் கன்றுகளை அழைக்கின்ற த்வநியாலும், அதைக் கேட்டு அவை கூப்பாடு போடுகின்ற த்வநியாலும் அருகிலுள்ள மலைகளில் பயங்கரமான பிரதித்வநி கிளம்புமே! என்று வழியின் கொடுமையை நினைத்து நோகின்றாளென்க.

English Translation

My gem-hued Lord would room the streets with the gem-girdled maidens everyday, gathering dust on his golden countenance. Instead I sent him after the grazing calves, along the echoing forest path. O, why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top