(237)

(237)

வண்ணக் கருங்குழல் மாதர் வந்துஅலர் தூற்றிட

பண்ணிப் பலசெய்துஇப் பாடி யெங்கும் திரியாமே

கண்ணுக் கினியானைக்கா னதரிடைக் கன்றின்பின்

எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

கண்ணுக்கு இனியானை

கண்களுக்கு மிகவும் தர்சநீயனாய்
எண்ணற்கு அரியானை

(இத்தன்மையன் என்று) நினைக்கமுடியாதவனாயுள்ள கண்ணபிரானை
இ பாடி எங்கும்

இத்திருவாய்ப்பாடி முழுவதும்
பல செய்து

பல (தீமைகளைச்) செய்து (அத்தீமைகளினால்)
வண்ணம் கரு குழல்

அழகிய கறுத்த கூந்தலையுடையரான
மாதர்

பெண்பிள்ளைகள்
வந்து

(தாயாகிய என்னிடம் ஓடி) வந்து
அலர் தூற்றிடப் பண்ணி

பழிதூற்றும்படியாகப் பண்ணிக்கொண்டு
திரியாமே

திரியவொட்டாமல்
கான் அதர் இடை

காட்டு வழியிலே
கன்றின் பின்

கன்றுகளின் பின்னே (திரியும்படி)
போக்கினேன்

அனுப்பினேனே!

எல்லே பாவமே!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கண்ணுக்கினியானை=எத்தனையேனுந் தீம்பு செய்யிலும் அவன் வடிவழகை நினைத்தால் ‘ஆகிலுங்கொடிய வென்னெஞ்சம் அவனென்றே கிடக்கும்’ என்றாற்போல இவனை விடப்போகாதே!’ என்று கருத்து.

English Translation

He is beautiful to behold, he is hard to understand. He would roam this cowherd settlement everywhere doing things that brought dark-coiffured women complaining to me. Instead I sent him after the grazing calves, along the echoing forest path. O, why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top