(235)

(235)

பற்று மஞ்சள்பூசிப் பாவை மாரொடு பாடியில்

சிற்றில் சிதைத்துஎங்கும் தீமை செய்து திரியாமே

கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன்றின்பின்

எற்றுக்குஎன் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

பாடியில்

–

திருவாய்ப் பாடியில்
பற்று மஞ்சள் பூசி

–

பற்றுப் பார்க்கும் மஞ்சளை(த்திருமேனியெங்கும் பெண்கள் கையால் தனித்தனியே) பூசப்பெற்று,
சிற்றில் சிதைத்து

–

(அப்பெண்கள்  இழைக்கும்) சிற்றில்களை உதைத்தழித்து (இப்படி)
எங்கும்

–

எல்லாவிடங்களிலும்
தீமை செய்து

–

தீம்புகளைச் செய்து கொண்டு
பாவை மாரொடு

–

அவ்விடைப் பெண்களோடே
திரியாமே

–

திரியவொட்டாமல்,
கன்று

–

கன்றுகளினுடைய
தூளி உடை

–

தூள்களையுடைத்தாய்
வேடர்

–

(அடித்துப் பிடுங்கும்) வேடர்களுக்கிருப்பிடமான
கான் இடை

–

காட்டிலே
கன்றின் பின்

–

கன்றுகளின் பின்னே (திரியும்படியாக)
என் பிள்ளையை

–

என் மகனை
ஏற்றுக்கு போக்கினேன்

–

ஏதுக்காக அனுப்பினேன்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சளரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதைப் பரீக்ஷிப்பதற்காகக் கண்ணபிரானுடைய கரிய திருமேனியிலே பூசிப்பார்ப்பார்களாம்; ஆதலால் அம்மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பேர் பெற்றது. [கற்றுத்தூளி யித்யாதி.] கன்றுகள் திரள் நுகைத்துக் கிளப்பின தூள்கள் காடெங்கும் பாக்குமாதலால் கண்ணபிரானுடைய பொன் போல் மஞ்சனமாட்டின மேனி நிறம் மழுங்குமேயென்று வயிறெரிகின்றனள்.

English Translation

With bath-turmeric smeared all over, he would go around kicking the sand castles of girls, and make mischief everywhere. Instead, I sent him into the hunter’s forest covering him with the dust of grazing calves. O why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top