(234)

(234)

அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை

மஞ்சன மாட்டி மனைகள் தோறும் திரியாமே

கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன்றின்பின்

என்செயப் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே.

பதவுரை

அஞ்சனம் வண்ணனை

–

மைபோன்ற நிறத்தையுடையனும்
ஆயர் கோலம்

–

இடைக்கோலம் பூண்டுள்ளவனும்
கொழுந்தினை

–

(அவ்விடையர்க்குத்) தலைவனும்
பிள்ளையை

–

(எனக்குப்) பிள்ளையுமான கண்ணனை
மனைகள் தொறும்

–

(தன்வீட்டிற் போலவே) அயல்வீடுகள் தோறும்
திரியாமே

–

(இஷ்டப்படி) திரியவொட்டாமல்
மஞ்சனம் ஆட்டி

–

(காலையில் குள்ளக்குளிர) நீராட்டி,
கஞ்சனை

–

கம்ஸனை
காய்ந்த

–

சீறியுதைத்த
கழல்

–

வீரக்கழலை அணிந்துள்ள
அடி

–

திருவடிகள்
நோவ

–

நோம்படியாக
கன்றின்பின்

–

கன்றுகளின் பின்னே (மேய்க்கப் போவென்று)
என் செய போக்கினேன்

–

ஏதுக்காகப் போக விட்டேன்!;
எல்லே பாவமே

–

மஹாபாபம்! மஹாபாபம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆயர்கோலக் கொழுந்தினை-இடையர்களுக்கு அழகியகொழுந்து போன்றுள்ளவ னென்னவுமாம்; வேரிலே வெக்கை தட்டினால் முற்பட வாடுங் கொழுந்துபோலே, ஊரிலுள்ளாரில் ஆர்க்கேனும் ஒரு நோவுவந்தால் முற்படக் கண்ணபிரான் தன்முகம் வாடும்படியிருத்தலால் கொழுந்தெனப்பட்டான். “மஞ்சனமாட்டி”  என்ற வினையெச்சம்-’போக்கினேன்’ என்பதோடு இயையும். கம்ஸனைச் சீறியுதைத்த திருவடிகள் ஏற்கனவே நொந்திருக்கும்; பின்னையும் நோவு விஞ்சும்படியாகக் காட்டுக்கனுப்பிய பாவியேனுடைய பாவநினைவு என்னாயிருந்ததென்று வயிறெரிகின்றனள். கழல்-வீரத்தண்டை. என் செய்-என் செய்ய; தொகுத்தல். எல்லே-இரக்கத்தைக் குறிக்கும் இடைச்சொல்.

English Translation

My dark hued Lord and master of the cowherd clan would have his bath, then go roaming from house to house. Instead I sent the child after the calves, hurting those tender feet that smote Kamsa. O, why did I do such a wicked thing?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top