(233)

(233)

கரார் மேனி நிறத்தெம்பி ரானைக் கடிகமழ் பூங்குழ லாய்ச்சி

ஆரா இன்னமு துண்ணத் தருவன்நான் அம்மம்தா ரேனென்ற மாற்றம்

பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பட்டர்பி ரான்சொன்ன பாடல்

ஏரா ரின்னிசை மாலை வல்லார் இருடீகே சனடி யாரே.

பதவுரை

கார் ஆர்

மேகத்தோடு ஒத்த
மேனி நிறத்து

திருமேனி நிறத்தையுடைய
எம் பிரானை

கண்ணபிரானைக் குறித்து,
கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி

வாஸனை வீசாநின்றபூக்களை அணிந்த கூந்தலையுடைய யசோதை
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான்

”(எவ்வளவு குடித்தாலும்) திருப்திபிறவாத இனிய ஸ்தந்யத்தை இதுவரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான்

(இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்)

அம்மம் தாரேன்

அம்மந்தர அஞ்சுவேன்”
என்ற மாற்றம்

என்று சொன்ன பாசுரத்தை
சொன்ன

அருளிச்செய்த,
பார் ஆர்

பூமியெங்கும் நிறைந்துள்ள
தொல்

பழமையான
புகழான்

கீர்த்தியையுடையராய்
புதுவை

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
மன்னன்

நிர்வாஹகரான
பட்டர் பிரான்

பெரியாழ்வாருடைய
பாடல்

பாடலாகிய
ஏர் ஆர் இன் இசை மாலை

இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல்மாலையை
வல்லார்

ஓதவல்லவர்கள்
இருடீகேசன்

ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு
அடியார்

அடிமைசெய்யப்பெறுவார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆராவின்னமுது= யசோதைப் பிராட்டியின் முலை, பூதனையின் முலைபோல் விஷந்தடவப் பெற்றிராமையால், அம்முலையிற்பால் அமுதாகச் சொல்லப்பட்டது.[தருவன் நான் அம்மம் தாரேன்.] ‘தருவன்’’ என்ற எதிர்கால வினைமுற்று (வழுவமைதி யிலக்கணப்படி) ‘தந்தேன்’’ என்ற இறந்தகாலப் பொருளைத் தந்தது மன்றி, ‘தந்த நான் அம்மந்தாரேன்’ என்று பெயரெச்சப் பொருளையுந் தந்தவாறு காண்க: ஆகவே இவ்வினைமுற்று-முற்றெச்சம் என்றற்பாற்று.

English Translation

This decad of sweet songs by Pattarbiran, King of famous Puduvai recalls the words of fragrant coiffured Yasoda to the cloud-hued Lord weaning him from breast milk. Those who sing it well will become devotees of the Lord Hrisikesa.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top