(232)
தொத்தார் பூங்குழல் கன்னி யொருத்தியைச் சோலைத் தடம்கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்துஇரா நாழிகை மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான்ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.
பதவுரை
| தொத்து ஆர் |
– |
கொத்தாய்ச் சேர்ந்திருந்துள்ள |
| பூ |
– |
புஷ்பங்கள் அணியப்பெற்ற |
| குழல் |
– |
கூந்தலையுடைய |
| கன்னி ஒருத்தியை |
– |
ஒரு கன்னிகையை |
| தடஞ்சோலை |
– |
விசாலமானதொரு சோலையிலே |
| இரா |
– |
(நேற்று) இரவில் |
| கொண்டு புக்கு |
– |
அழைத்துக்கொண்டுபோய் |
|
(அவளுடைய) |
||
| முத்து ஆர் |
– |
முத்துவடமணிந்த |
| கொங்கை |
– |
ஸ்தநங்களோடு |
| புணர்ந்து |
– |
ஸம்ச்லேஷித்துவிட்டு |
| மூ ஏழு நாழிகை சென்ற பின் |
– |
மூன்றுயாமங்கள் கடந்த பிறகு |
| வந்தாய் |
– |
(வீட்டுக்கு) வந்து சேர்ந்தாய்; |
|
(நீ இவ்வாறு தீமை செய்கையாலே) |
||
| உன்னை |
– |
உன்னைக்குறித்து |
| ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் |
– |
வேண்டுவார் வேண்டினபடி சொல்லுவார்கள்; |
|
(இப்படி அவர்கள் சொல்லாதிருக்கும்படி) |
||
| உரப்ப |
– |
(உன்னை) சிக்ஷிக்க |
| நான் |
– |
(அபலையாகிய) நான் |
| ஒன்றும் |
– |
கொஞ்சமும் |
| மாட்டேன் |
– |
சக்தையல்லேன்; |
| அத்தா |
– |
நாயனே! |
|
உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அம்மம் தர அஞ்சுவன். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-’ சோலைத்தடம்’ என்றவிடத்து ‘தடம்’ என்ற சொல் தடம் என்ற வடசொல்லின் விகாரமாய் ‘சோலைத்தடம்’ என்பதற்குச் சோலைப் பிராந்தங்களிலே என்று பொருள்கொள்ளவுங் கூடும். [ஒத்தார்க்கு இத்யாதி.] (ஒத்தார்க்கு என்றது ஒத்தார் என்றபடி; ஆறனுருபுக்குப் பொருளில்லை; வழக்கு பற்றி வந்த வழுவமைதி.) உன்மேல் பழிசொல்ல நினைத்தவர்கள் நீ செய்யாதவற்றையுஞ் சில சேர்த்துக்கொண்டு தாங்கள் நினைத்தபடி சொல்லத் தடையில்லை யென்றவாறு. உரப்புதல்-வாயால் அதட்டுதல்; “ஊனமுடையன செய்யப்பெறா யென்றிரப்ப நுரப்பகில்லேன்”” என்றார் திருமங்கை யாழ்வாரும்.
English Translation
You took a flower-coiffured maiden into the deep forest, embraced her pearly breasts and came back after the third watch of the night. People speak ill of you. Alas, I am unable to scold you. My Lord, I know you now, I fear to give you suck.
