(233)
கரார் மேனி நிறத்தெம்பி ரானைக் கடிகமழ் பூங்குழ லாய்ச்சி
ஆரா இன்னமு துண்ணத் தருவன்நான் அம்மம்தா ரேனென்ற மாற்றம்
பாரார் தொல்புக ழான்புது வைமன்னன் பட்டர்பி ரான்சொன்ன பாடல்
ஏரா ரின்னிசை மாலை வல்லார் இருடீகே சனடி யாரே.
பதவுரை
| கார் ஆர் |
– |
மேகத்தோடு ஒத்த |
| மேனி நிறத்து |
– |
திருமேனி நிறத்தையுடைய |
| எம் பிரானை |
– |
கண்ணபிரானைக் குறித்து, |
| கடி கமழ் பூ குழல் ஆய்ச்சி |
– |
வாஸனை வீசாநின்றபூக்களை அணிந்த கூந்தலையுடைய யசோதை |
| ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் |
– |
”(எவ்வளவு குடித்தாலும்) திருப்திபிறவாத இனிய ஸ்தந்யத்தை இதுவரை உனக்கு உண்ணத் தந்துகொண்டிருந்த நான் |
|
(இன்று உன் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தேனாகையால்) |
||
| அம்மம் தாரேன் |
– |
அம்மந்தர அஞ்சுவேன்” |
| என்ற மாற்றம் |
– |
என்று சொன்ன பாசுரத்தை |
| சொன்ன |
– |
அருளிச்செய்த, |
| பார் ஆர் |
– |
பூமியெங்கும் நிறைந்துள்ள |
| தொல் |
– |
பழமையான |
| புகழான் |
– |
கீர்த்தியையுடையராய் |
| புதுவை |
– |
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு |
| மன்னன் |
– |
நிர்வாஹகரான |
| பட்டர் பிரான் |
– |
பெரியாழ்வாருடைய |
| பாடல் |
– |
பாடலாகிய |
| ஏர் ஆர் இன் இசை மாலை |
– |
இயலழகாலே நிறைந்து இனிய இசையோடே கூடியிருந்துள்ள சொல்மாலையை |
| வல்லார் |
– |
ஓதவல்லவர்கள் |
| இருடீகேசன் |
– |
ஹ்ருஷிகேசனான எம்பெருமானுக்கு |
| அடியார் |
– |
அடிமைசெய்யப்பெறுவார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆராவின்னமுது= யசோதைப் பிராட்டியின் முலை, பூதனையின் முலைபோல் விஷந்தடவப் பெற்றிராமையால், அம்முலையிற்பால் அமுதாகச் சொல்லப்பட்டது.[தருவன் நான் அம்மம் தாரேன்.] ‘தருவன்’’ என்ற எதிர்கால வினைமுற்று (வழுவமைதி யிலக்கணப்படி) ‘தந்தேன்’’ என்ற இறந்தகாலப் பொருளைத் தந்தது மன்றி, ‘தந்த நான் அம்மந்தாரேன்’ என்று பெயரெச்சப் பொருளையுந் தந்தவாறு காண்க: ஆகவே இவ்வினைமுற்று-முற்றெச்சம் என்றற்பாற்று.
English Translation
This decad of sweet songs by Pattarbiran, King of famous Puduvai recalls the words of fragrant coiffured Yasoda to the cloud-hued Lord weaning him from breast milk. Those who sing it well will become devotees of the Lord Hrisikesa.
