(199)

(199)

இன்ப மதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்

கும்பக் களிறட்ட கோவே கொடுங்கஞ்சன் நெஞ்சினிற் கூற்றே

செம்பொன்மதிள்வெள் ளறையாய் செல்வத்தி னால்வளர் பிள்ளாய்

கம்பக் கபாலிகாண் அங்குக் கடிதோடிக் காப்பிட வாராய்.

பதவுரை

(உன் குணசேஷ்டிதங்களால்)

இன்பம் அதனை

–

பரமாநந்தத்தை
உயர்த்தாய்

–

(எனக்கு) மேன்மேலுண்டாக்கினவனே!
இமையவர்க்கு

–

தேவர்க்கு
என்றும்

–

எந்நாளும்
அரியாய்

–

அருமையானவனே!
கும்பம்

–

மஸ்தகத்தையுடைய
களிறு

–

குவலயாபீடத்தை
அட்ட

–

கொன்ற
கோவே

–

ஸ்வாமியே!
கொடு

–

கொடுமைதங்கிய
கஞ்சன்

–

கம்ஸனுடைய
நெஞ்சினில்

–

மநஸ்ஸிலே
கூற்றே

–

யமன் போல் பயங்கரனாய்த் தோன்றுமவனே!

செம் பொன் மதிள் வெள்ளறையாய்! ;

செல்லத்தினால் வளர்

–

செல்வச் செருக்கோடு வளர்கின்ற
பிள்ளாய்

–

குழந்தாய்!
அங்கு

–

நீ இருக்கிறவிடத்தில்
கம்பம்

–

(கண்டார்க்கு) நடுக்கத்தை   விளைக்கவல்ல
கபாலி காண்

–

துர்க்கையாகும்;

(ஆகையால் அங்கு நில்லாமல்)

கடிது ஓடி

–

மிகவும் விரைந்தோடி

காப்பு இட வாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அங்கு துர்க்கையென்னும் க்ஷுத்ர தேவதையிருப்பதனால் அவ்விடத்தைவிட்டு நான் காப்பிடும்படி விரைந்து வரவேணுமென்பதாம்.  கபாலி – ருத்ரனென்றுமாம்.  இனி, உடம்பு நிறையச் சாம்பல் பூசி எலும்புகளை மாலையாகக் கட்டியணிந்து கையில் கபாலங்கொண்டு பிச்சையெடுப்பவர் இரவிற் பிச்சை யெடுத்தத் திரிவது முற்காலத்தியற்கையாதலால் அப்படிப்பட்டவர்களை ‘கபாலி, என்றதாகவுமாம்; அப்படியிருப்பவர்களைக் கண்டு குழந்தைகள் அஞ்சுமென்று அழைத்தல் இயல்பு.

English Translation

O Lord giving manifold pleasures, Lord evading the celestials, Lord who killed the rutted elephant, Lord who spelt death in evil Kamsa’s heart, Lord residing in gold walled Vellarai! O Child growing up in affluence! Look, there is a skull-holder hiding behind the pillar there. Come running quickly and let me ward off the evil eye.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top