(200)

(200)

இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில்மறை யோர்வந்து நின்றார்

தருக்கேல்நம்பி சந்தி நின்று தாய்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்

திருக்காப்பு நான்உன்னைச் சாத்தத் தேசுடை வெள்ளறை நின்றாய்

உருக்காட்டும் அந்தி விளக்குஇன் றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய்.

பதவுரை

இருக்கொடு

(புருஷஸூக்தம் முதலிய) ருக்குக்களைச் சொல்லிக்கொண்டு
நீர்

தீர்த்தத்தை
சங்கில்

சங்கத்திலே
கொண்டிட்டு

கொணர்ந்து
எழில்

விலக்ஷணரான
மறையோர்

ப்ராஹ்மணர்

(உனக்கு ரக்ஷையிடுவதற்கு)

வந்து நின்றார்

வந்து நிற்கிறார்கள்;
நம்பி

தீம்பு நிறைந்தவனே!
சந்தி நின்று

நாற்சந்தியிலே நின்று
தருக்கேல்

செருக்கித் திரியாதே;
சில நாள்

சில காலம்
தாய் சொல்லு

தாய் வார்த்தையை
கொள்ளாய்

கேட்பாயாக;
தேசு உடை

தேஜஸ்ஸை உடைய வெள்ளறை நின்றாய்! ;
இன்று

இப்போது
நான்

நான்
திரு காப்பு

அழகிய ரக்ஷையை
உன்னை சாத்த

உனக்கு இடுதற்காக
உருகாட்டும் அந்திவிளக்கு

உன் திருமேனி வடிவத்தைக் காட்டுகின்ற அந்தி விளக்கை
ஏற்றுகேன்

ஏற்றுவேன்;

(இதைக்காண)

வாராய்

கடுக வருவாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “உனக்கு ரக்ஷையிடும்படி விலக்ஷணரான பிராமணர் சங்குகளில் நீரெடுத்துக் கொண்டு  வந்திருக்கிறார்கள்” என்று யசோதை சொல்லவும், கண்ணன் விளையாடப்போகவே, மீண்டும் ‘நீ பிராமணர்கள் ரக்ஷையிடும்படி வராவிட்டாலும் நாற்சந்தியிலே செருக்குடன் விளையாடித்திரிதல் கூடாது.  அது க்ஷுத்ர தேவதைகள் வஸிக்கிற இடமாகும்.  தாய் சொல்வதை இன்னுஞ் சிலகாமாவது கேள்; உனக்கு ரக்ஷையிட விளக்கேற்றுகிறேன்; நீ அவ்விடத்தைவிட்டு வரவேணும், என்கிறாள்.  இக்காலத்திலும், விளக்கேற்றிக் குழந்தைகளுக்குச் சுழற்றும் வழக்கமுளது.

English Translation

O Lord residing in resplendent Vellarai! Listen to Mother’s words for a few more days. Bright Vedic seers have come with Rig Mantras and conches filled with water. Do not stand at the crossroads resisting. Come, let me light the evening lamp and shine it on your face to ward off the evil eye.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top