(201)

(201)

போதமர் செல்வக் கொழுந்து புணர்திரு வெள்ளறை யானை

மாதர்க் குயர்ந்த அசோதை மகன்தன்னைக் காப்பிட்ட மாற்றம்

வேதப் பயன்கொள்ள வல்ல விட்டுசித் தன்சொன்ன மாலை

பாதப் பயன்கொள்ள வல்ல பத்தருள் ளார்வினை போமே.

பதவுரை

மாதர்க்கு உயர்ந்த

ஸ்திரீகளுள் சிறந்த
அசோதை

யசோதைப்பிராட்டி
மகன் தன்னை

தன்புத்ரனான கண்ணனை
காப்பு இட்ட

ரக்ஷையிட அழைத்த
மாற்றம்

வார்த்தையை
போது அமர்

தாமரைப்பூவைப் (பிறப்பிடமாகப்) பொருந்திய
செல்வம் கொழுந்து

செல்வத்திற்கு உரியவனாய் மற்றைத் தேவியரிற் சிறந்தவளான பிராட்டி
புணர்

ஸம்ச்லேஷிக்கப்பெற்ற
திருவெள்ளறையானை

திருவெள்ளறையில் நின்றருளியவனைப் பற்றி-,

(எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செய்கையையே)

வேதம் பயன்

வேததாத்பர்யமாக
கொள்ளவல்ல

அறியவல்ல
விட்டுசித்தன்

பெரியாழ்வார்
சொன்ன

அருளிச்செய்த
மாலை

பாமாலையினுடைய
பாதம் பயன்

ஓரடி கற்றதனாலாகிய பயனை
கொள்ள வல்ல

அடையவல்ல
பக்தர் உள்ளார்

பக்தராக உள்ளவரது
வினை

வினைகளெல்லாம்
போம்

கழிந்துவிடும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒரு பாசுரத்தின் ஓரடிக்கு இத்துணை மஹிமை கூறியமுகத்தால் இத்திருமொழியின் பயன் அளவிட்டுச் சொல்லமுடியாதென்பதைக் கைமுதிகந்யாயத்தால் பெறவைத்தார்.  (பாதப்பயனித்யாதி.) ஒவ்வொரு பாட்டின் கடைசிப்பாதத்தில் கூறியுள்ள காப்பிடலாகிய புருஷார்த்தத்தைக் கைக்கொள்ளக்கடவ பக்தர்களுடைய பாபங்கள் தீருமென்று முரைக்கலாம்.

அடிவரவு:- இந்திரன் கன்று செப்பு கண்ணில் பல்லாயிரவர் கஞ்சன்  கள்ளம் இன்பம் இருக்கு போதமர் வெண்ணெய்.

English Translation

This decade of sings by Vishnuchitta adept in Vedic pursuits recalls the words of Yasoda, excellent among mothers and verily the lotus-dame Lakshmi herself, sung to ward off the evil eye on her son, the resident Lord of Tiruvellari. Devotees who understand the song’s refrain will suffer no Karma.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top