(198)

(198)

கள்ளச் சகடும் மருதும் கலக்கழி யஉதை செய்த

பிள்ளை யரசேநீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை

உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்

பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே காப்பிட வாராய்.

பதவுரை

கள்ளம்

–

வஞ்சனையுடைய
சகடும்

–

சகடாஸுரனையும்
மருதும்

–

யமளார்ஜுநங்களையும்
கலக்கு அழிய

–

(வடிவம்) கட்டுக்குலைந்தழியும்படி
உதை செய்த

–

(திருவடிகளால்) உதைத்துத் தள்ளிய
பிள்ளை அரசே

–

பிள்ளைத் தன்மையைக் கொண்ட பெருமையனே!
நீ

–

நீ
பேயை

–

பூதனையினுடைய
முலைபிடித்து உண்ட பின்னை

–

முலையைப் பிடித்து (வாய்வைத்து) உண்டபின்பு
உள்ள ஆறு

–

உள்ளபடி
ஒன்றும் அறியேன்

–

ஒன்றுமறிகிறேனில்லை;

ஒளி உடை வெள்ளறை நின்றாய்! ;

இது

–

இப்போது
பள்ளிகொள்போது ஆகும்

–

படுத்து உறங்குகிற வேளையாகும்;

பரமனே! காப்பு இட வாராய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘’பேய்ச்சிமுலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சுவனே” என்ற பெரிய திருமொழிப் பாசுரத்தோடு இப்பாட்டின் இரண்டு ­மூன்றாமடிகளை ஒருபுடை ஒப்பிடுக.  பார்த்தால் சிறுவன் போலிருக்கின்றாய், நீ செய்யும் செய்கையோ அதிமாநுஷம், ஆகையால் உனது உண்மையான ஸ்வரூபம் என்னாலறியப்போகிறதில்லை யென்கிறாள்.

English Translation

O Lord residing in bright and beautiful Vellarai! O Child-king who destroyed the cart and the twin Arjuna trees! After you drank the milk from the ogress Putana’s breast, I cannot understand things as they really are. It is bed time now. Come, let me ward off the evil eye.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top