(158)

(158)

கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்

பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே

சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே

மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.

பதவுரை

எம்பிரானே-!

கறந்த (அந்தந்த காலங்களில்) கறந்த
நல்பாலும் நல்ல பாலையும்
தயிரும் தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்,
பிறந்ததுவே முதல் ஆக (நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன் கண்டறியேன்
சிறந்த நல்தாய் ‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்
அலர்தூற்றும் பழி சொல்லுகின்றாளே
என்பதனால் என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே அயலா ரெதிரில்
மறந்தும் ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன் (உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்

மஞ்சனம் ஆட நீ வாராய்-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி இவன்மேல் பழிதூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன்மேல் பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.

English Translation

Ever since you were born, I have not seen fresh milk, curds or Ghee. And yet, because a good mother never finds fault, even by mistake! Do not scold you before others. My Lord, come have your bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top