(158)

(158)

கறந்தநற் பாலும் தயிரும் கடைந்துஉறி மேல்வைத்த வெண்ணெய்

பிறந்தது வேமுத லாகப் பெற்றறி யேன் எம்பிரானே

சிறந்தநற் றாய்அலர் தூற்றும் என்பத னால்பிறர் முன்னே

மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சன மாடநீ வாராய்.

பதவுரை

எம்பிரானே-!

கறந்த – (அந்தந்த காலங்களில்) கறந்த
நல்பாலும் – நல்ல பாலையும்
தயிரும் – தயிரையும்
கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் – (தயிரைக்) கடைந்து உறியில் வைத்திருக்கிற வெண்ணெயையும்,
பிறந்ததுவே முதல் ஆக – (நீ) பிறந்தவன்று தொடங்கி
பெற்று அறியேன் – கண்டறியேன்
சிறந்த நல்தாய் – ‘(எல்லாரினுங் குழந்தைக்குச்) சிறக்கின்ற பெற்ற தாயும்
அலர்தூற்றும் – பழி சொல்லுகின்றாளே
என்பதனால் – என்று சொல்லுவார்களே என்ற அச்சத்தினால்
பிறர் முன்னே – அயலா ரெதிரில்
மறந்தும் – ப்ராமாதிகமாகவும்
உரை ஆட மாட்டேன் – (உனக்குக் குறைவைத் தருஞ்) சொல்லைச் சொல்ல மாட்டேன்

மஞ்சனம் ஆட நீ வாராய்-

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (சிறந்தவித்யாதி.) ‘மகன் குற்றம் செய்தாலும் மறைக்கும்படி மிகுந்த அன்புடையளான தாயும் இப்படி இவன்மேல் பழிதூற்றினால், இவன் எவ்வளவு துஷ்ட சேஷ்டிதனாயிருப்பனோ’ என்று உன்மேல் பிறர் குறைவாகச் சொல்லப் போகிறார்களோ யென்ற எண்ணத்தினா லென்றபடி.

English Translation

Ever since you were born, I have not seen fresh milk, curds or Ghee. And yet, because a good mother never finds fault, even by mistake! Do not scold you before others. My Lord, come have your bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top