(159)
கன்றினை வாலோலை கட்டிக் கனிக ளுதிர எறிந்து
பின்தொடர்ந் தோடிஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும்
நன்திறத் தேனல்லன் நம்பீ நீபிறந் ததிரு நல்நாள்
நின்றுநீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.
பதவுரை
| கன்றினை |
– |
கன்றினுடைய |
| வால் |
– |
வாலிலே |
| ஓலை கட்டி |
– |
ஓலையைக்கட்டி |
| (கன்றை) |
– |
(அஸுரத் தன்மையினால் உன்னைக் கொல்லவந்த ஒரு) கன்றை |
|
(எறிகுணிலாகக்கொண்டு, அஸுராவேசமுள்ள விளாமரத்தின்) |
||
| கனிகள் |
– |
பழங்கள் |
| உதிர |
– |
(கீழே) உதிர்ந்து விழும்படி |
| எறிந்து |
– |
வீசி |
| பின் |
– |
பின்பு |
| ஓடி தொடர்ந்து |
– |
ஓடிப்போய் |
| ஓர் பாம்பை |
– |
(காளியனென்ற) ஒரு ஸர்ப்பத்தை |
| பிடித்துக்கொண்டு |
– |
பிடித்துக்கொண்டு |
| ஆட்டினாய் போலும் |
– |
ஆட்டினவ்னோதான் (நீ); |
| நம்பி |
– |
ஒன்றிலும் குறைவில்லாதவனே! |
|
(நான்) |
||
| நின் திறத்தேன் அல்லேன் –; |
– |
உன் விஷயமொன்றையுமறியாதவளாயிரா நின்றேன் |
|
(அதுகிடக்கட்டும்;) |
||
| நீ பிறந்த |
– |
நீ அவதரித்த |
| நல் திரு நாள் |
– |
திருநிஷத்திரமாகும் (இந்நாள்); |
|
(ஆகையால்) |
||
|
நீ நின்று நீர் ஆடவேண்டும் |
||
|
நாரணா ஓடாதே வாராய் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் கன்று துள்ளியொடுவதைக் காண்கைக்காக அதன் வாலிலே ஓலைகளை முடைந்து விடுவதனால்,’கன்றினை வாலோலை கட்டி’ என்றார். கன்றினை-உருபுமயக்கம், [நன் இத்யாதி,] ‘அத்தைச்செய்தான் இத்தைச்செய்தான்’ என்றிப்படி யெல்லாம் சொல்லுவார் சொல்லக் கேட்டதல்லது, உன்னுடைய தன்மையை நனைத்தறிதற்கும் எனக்கு முடியாதென்றபடி.
English Translation
You tied a palm leaf to a calf‘s tail, then threw a calf against a tree felling its fruits. You ran after a snake, grabbed and shook its tail, and danced on its hood. Alas, I am not match for you. Today is your auspicious birthday. O Narayana, do not run away. Come, you must have your bath.
