(157)
எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.
பதவுரை
| எண்ணெய் குடத்தை |
– |
எண்ணெய் நிறைந்த குடத்தை |
| உருட்டி |
– |
உருட்டிவிட்டு |
| இள பிள்ளை |
– |
(உறங்குகிற) சிறு குழந்தைகளை |
| கிள்ளி |
– |
கையால் வெடுககெனக் கிள்ளி |
| எழுப்பி |
– |
(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து |
| கண்ணை |
– |
கண் இமையை |
| புரட்டி விழித்து |
– |
தலைகீழாக மாற்றி (அப்பூச்சி காட்டி) விழித்து |
| கழைகண்டு |
– |
பொறுக்க முடியாத தீம்புகளை |
| செய்யும் |
– |
செய்துவருகிற |
| பிரானே |
– |
ஸ்வதந்த்ரனே! |
| கனிகள் |
– |
(நில்ல) பழங்களை |
| உண்ண |
– |
(நீ) உண்ணும்படி |
| தருவன் |
– |
(உனக்குக்) கொடுப்பேன் |
| ஒலி |
– |
கோஷியாகி்ன்ற |
| கடல் |
– |
கடலினுடைய |
| ஓதம் |
– |
அலைகளையுடைய |
| நீர் போலே |
– |
ஜலம்போலே |
| வண்ணம் அழகிய |
– |
திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற |
| நம்பீ |
– |
உத்தமபுருஷனே! |
|
மஞ்சனம் ஆட நீ வாராய் – |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அகத்திலுள்ளார் எல்லாரும் அந்யபரரம்படியாக முதலிலே எண்ணெய்க்குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக்கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! என்றபடி. கண் – இமைக்கு ஆகுபெயர். கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறிவிழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.
English Translation
O Lord of dark ocean-hue! Overturning the oil pitchers, pinching and waking up sleeping children, turning your eyelids inside out, such are the mischiefs you play. My Master, I will give you fruit to eat. Come, you must have your bath.
