(156)
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ
செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
பதவுரை
| நம்பி |
– |
(பால சாபலத்தால்) பூர்ணனே! |
| செப்பு |
– |
பொற்கலசம்போன்ற |
| இள மெல் முலையார்கள் |
– |
இளமையான மெல்லிய முலையையுடைய மாதர்கள் |
| சிறுபுறம் பேசி |
– |
(உன்மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி |
| சிரிப்பர் |
– |
பரிஹஸிப்பார்கள். (அன்றியும்), |
| பாலில் |
– |
பாலிலே |
| அக்காரம் |
– |
வெல்லக்கட்டியை |
| கலந்து |
– |
சேர்த்துப் (பிசைந்து) |
| அப்பம் |
– |
அப்பத்தையும் |
| கலந்த |
– |
(அப்படியே) சேர்ந்த |
| சிற்றுண்டி |
– |
சிற்றுண்டியையும் |
| சொப்பட |
– |
நன்றாக |
|
நான் சுட்டு வைத்தேன் |
||
|
(நீ அவற்றை) |
||
| தின்னல் உறுதி ஏல் |
– |
தின்ன விரும்பினாயாகில் |
| சொப்பட |
– |
நன்றாக |
| நீர் ஆட வேண்டும் |
– |
|
| பிரான் |
– |
ஸ்வாமியே! |
| சோத்தம் |
– |
உனக்கு ஓரஞ்சலி |
|
இங்கே வாராய் – |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான். அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு. சிறுமை + உண்டி – சிற்றுண்டி. “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம். (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.
English Translation
I have made a snack of sweetmeats cooked with milk and sugar. My Lord, are you ready to have it? Come then. Red supple-breasted girls will laugh and speak ill of you behind for your back, you must have your bath.
