(155)

(155)

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து

வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய்முலை வைத்த பிரானே

மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகை யும்நாறு சாந்தும்

அஞ்சன மும்கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.

பதவுரை

கஞ்சன்

–

கம்ஸனுடைய
புணர்ப்பினில்

–

கபடமான ஆலோசனையினாலே
வந்த

–

(நலிவதாக) வந்த
கடிய

–

(அஸுராவேசத்தாலே) க்ரூரமான
சகடம்

–

சகடத்தை
உதைத்து

–

(திருவடிகளால்) உதைத்து முறித்துவிட்டு,
வஞ்சகம்

–

வஞ்சனையுள்ள
பேய்மகள்

–

பூதனையானவள்
துஞ்ச

–

முடியும்படி
முலை

–

(அவளுடைய) முலையிலே
வாய்வைத்த

–

வாயைவைத்த
பிரானே

–

உபகாரகனே!

(உன்மேனி நிறம்பெறும்படி சாத்துவதற்கு உரிய)

மஞ்சளும்

–

மஞ்சளையும்
செங்கழுநீரின் வாசிகையும்

–

(நீராடிய பிறகு சாத்திக் கொள்ள வேண்டிய) செங்கழுநீர் மாலையையும்
நாறு சாந்தும்

–

பரிமளிதமான சந்தநத்தையும்
அஞ்சனமும்

–

(கண்களிலிடும்) மையையும்

கொண்டு வைத்தேன் —

அழகனே! நீராட வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உன் திருமேனிக்கு வேண்டுமவற்றை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி  நீ நீராடவேணுமென்பதற்காக அழகனே! என்கிறாள்.

English Translation

O Lord who smote the devilish cart instigated by Kamsa, and sucked the life out of Putana, I have gathered turmeric, lotus garland, fragrant Sandal paste, and Kohl. O Beautiful One, come for your bath!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top