(157)

(157)

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி

கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே

உண்ணக் கனிகள் தருவன் ஒலிகட லோதநீர் போலே

வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.

பதவுரை

எண்ணெய் குடத்தை

–

எண்ணெய் நிறைந்த குடத்தை
உருட்டி

–

உருட்டிவிட்டு
இள பிள்ளை

–

(உறங்குகிற) சிறு குழந்தைகளை
கிள்ளி

–

கையால் வெடுககெனக் கிள்ளி
எழுப்பி

–

(தூக்கம் வி்ட்டு) எழுந்திருக்கச் செய்து
கண்ணை

–

கண் இமையை
புரட்டி விழித்து

–

தலைகீழாக மாற்றி (அப்பூச்சி காட்டி) விழித்து
கழைகண்டு

–

பொறுக்க முடியாத தீம்புகளை
செய்யும்

–

செய்துவருகிற
பிரானே

–

ஸ்வதந்த்ரனே!
கனிகள்

–

(நில்ல) பழங்களை
உண்ண

–

(நீ) உண்ணும்படி
தருவன்

–

(உனக்குக்) கொடுப்பேன்
ஒலி

–

கோஷியாகி்ன்ற
கடல்

–

கடலினுடைய
ஓதம்

–

அலைகளையுடைய
நீர் போலே

–

ஜலம்போலே
வண்ணம் அழகிய

–

திருமேனியின் நிறம் அழகாயிருக்கப் பெற்ற
நம்பீ

–

உத்தமபுருஷனே!

மஞ்சனம் ஆட நீ வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அகத்திலுள்ளார் எல்லாரும் அந்யபரரம்படியாக முதலிலே எண்ணெய்க்குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில் அக் காரியத்தைவிட்டு ஓடிவரும்படி – தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற்போல வீரிட்டுக் கதறியழும்படி வெடுக்கெனக்கிள்ளி, ஸமீபத்திலே வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம்  தீம்பு செய்பவனே!  என்றபடி.  கண் – இமைக்கு ஆகுபெயர்.  கண்ணைப்புரட்டி விழித்து – வெளியிற் காணப்படுங் கருவிழி உட்புறமாகும்படி கண்ணை மாறிவிழித்து என்று உரைப்பாருமுள. ‘கழகண்டு’ என்றும் பிரதிபேதம்.

English Translation

O Lord of dark ocean-hue! Overturning the oil pitchers, pinching and waking up sleeping children, turning your eyelids inside out, such are the mischiefs you play. My Master, I will give you fruit to eat. Come, you must have your bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top