(156)

(156)

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து

சொப்பட நான்சுட்டு வைத்தேன் தின்ன லுறிதியேல் நம்பீ

செப்பிள மென்முலை யார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர்

சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான்இங்கே வாராய்.

பதவுரை

நம்பி

–

(பால சாபலத்தால்) பூர்ணனே!
செப்பு

–

பொற்கலசம்போன்ற
இள மெல் முலையார்கள்

–

இளமையான மெல்லிய முலையையுடைய மாதர்கள்
சிறுபுறம் பேசி

–

(உன்மேலே) அற்பமான குற்றங்களை மறைவிற் சொல்லி
சிரிப்பர்

–

பரிஹஸிப்பார்கள். (அன்றியும்),
பாலில்

–

பாலிலே
அக்காரம்

–

வெல்லக்கட்டியை
கலந்து

–

சேர்த்துப் (பிசைந்து)
அப்பம்

–

அப்பத்தையும்
கலந்த

–

(அப்படியே) சேர்ந்த
சிற்றுண்டி

–

சிற்றுண்டியையும்
சொப்பட

–

நன்றாக

நான் சுட்டு வைத்தேன்

(நீ அவற்றை)

தின்னல் உறுதி ஏல்

–

தின்ன விரும்பினாயாகில்
சொப்பட

–

நன்றாக
நீர் ஆட வேண்டும்

–

பிரான்

–

ஸ்வாமியே!
சோத்தம்

–

உனக்கு ஓரஞ்சலி

இங்கே வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘இப்பையல் அழுக்குடம்பனாயிரா நின்றான்’ என்று இடைச்சிகள் ஏசுவதற்கு இடமறும்படி நீராட வருவாயாகில் வேண்டிய பஷணங்கள் தருவேனென்கிறான்.  அப்பம் – ‘அபூபம்’ என்ற வடசொற்சிதைவு.  சிறுமை + உண்டி – சிற்றுண்டி.  “ஈறுபோதல்..தன்னொற்றிரட்டல்” “சிற்றுண்டை” என்றும் பாடமாம்.  (“சிறுபுறம்” என்றவிடத்தில்) சிறு – ‘சிறுமை’ என்ற பண்பினடி. புறம் பேசுதல் – மறைவில் குற்றத்தைச் சொல்லுதல்.

English Translation

I have made a snack of sweetmeats cooked with milk and sugar. My Lord, are you ready to have it? Come then. Red supple-breasted girls will laugh and speak ill of you behind for your back, you must have your bath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top