(140)
வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராய ணாஇங்கே வாராய்
எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்
கண்ணுக்குநன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா.
பதவுரை
| நண்ணி தொழுமவர் |
– |
கிட்டி வணங்குகின்றவர்களுடைய |
| சிந்தை |
– |
மநஸ்ஸில் நின்றும் |
| பிரியாத |
– |
விட்டு நீங்காத |
| நாராயணா |
– |
நாராயணனே! |
|
(நீ) |
||
| வண்ணம் |
– |
(மிக்க செந்) நிறத்தையுடைய |
| பவளம் |
– |
பவழவடத்தை |
| மருங்கினில் |
– |
திருவரையிலே |
| சாத்தி |
– |
சாத்திக்கொண்டு |
| மலர் |
– |
தாமரைமலர் போன்ற |
| பாதம் |
– |
பாதங்களிலணிந்த |
| கிண்கிணி |
– |
சதங்கை |
| ஆர்ப்ப |
– |
ஒலிக்கும்படி |
|
இங்கே வாராய் |
||
|
(உன்மேல்அன்பில்லாதவர்களுக்கு) |
||
| எண்ணற்கு அரிய பிரானே |
– |
நனைப்பதற்கு அருமையான ஸ்வாமியே! |
| திரியை |
– |
நூல் திரியை |
| எரியாமே |
– |
எரிச்சலுண்டாகாதபடி |
| காதுக்கு |
– |
(உன்) காதுகளுக்கு |
| இடுவன் |
– |
இடுவேன்; |
|
(அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான) |
||
| கண்ணுக்கு நின்றும் அழகு உடைய |
– |
கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்சநீயமான) |
| கனகம் கடிப்பும் |
– |
பொற்கடிப்பும் |
| இவை |
– |
இவையாகும்; |
| ஆ |
– |
ஆச்சர்யம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கீழ்ப்பாசுரத்தில் காதுகுத்த அழைத்தாள்; காதில் நூல்திரியை இட அழைக்கிறாள் – இப்பாட்டில். காதுகுத்தி நூல்திரியை இட்டுக் காது பெருக்கியபின்பு காதணிகளையிடுதல் இயல்பு. அழகும் = உம் – இசைநிறை. “கனகக்கடிப்புமிவையாம்” என்றும் பாடம் கொள்ளலாமென்பர். கடிப்பு – கர்ணபூஷணம்.
English Translation
O Narayana! Forever you remain in the thoughts of those who worship you! Wearing a colorful coral band on your waist, and jingling ankle bells on your lotus feet, comes hither. O Lord of beauty beyond imagination! I will insert the needle and thread without hurting you. See, these golden earrings are beautiful, yes?
