(140)

(140)

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப்பாதக் கிங்கிணி யார்ப்ப

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராய ணாஇங்கே வாராய்

எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன்

கண்ணுக்குநன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா.

பதவுரை

நண்ணி தொழுமவர்

–

கிட்டி வணங்குகின்றவர்களுடைய
சிந்தை

–

மநஸ்ஸில்  நின்றும்
பிரியாத

–

விட்டு நீங்காத
நாராயணா

–

நாராயணனே!

(நீ)

வண்ணம்

–

(மிக்க செந்) நிறத்தையுடைய
பவளம்

–

பவழவடத்தை
மருங்கினில்

–

திருவரையிலே
சாத்தி

–

சாத்திக்கொண்டு
மலர்

–

தாமரைமலர் போன்ற
பாதம்

–

பாதங்களிலணிந்த
கிண்கிணி

–

சதங்கை
ஆர்ப்ப

–

ஒலிக்கும்படி

இங்கே வாராய்

(உன்மேல்அன்பில்லாதவர்களுக்கு)

எண்ணற்கு அரிய பிரானே

–

நனைப்பதற்கு அருமையான ஸ்வாமியே!
திரியை

–

நூல் திரியை
எரியாமே

–

எரிச்சலுண்டாகாதபடி
காதுக்கு

–

(உன்) காதுகளுக்கு
இடுவன்

–

இடுவேன்;

(அப்படித் திரியையிட்டுக் காது பெருக்கினால் பின்பு நீ அணிய வேண்டியவையான)

கண்ணுக்கு நின்றும் அழகு உடைய

–

கண்களுக்கு மிகவும் அழகையுடைய (தர்சநீயமான)
கனகம் கடிப்பும்

–

பொற்கடிப்பும்
இவை

–

இவையாகும்;
ஆ

–

ஆச்சர்யம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – கீழ்ப்பாசுரத்தில் காதுகுத்த அழைத்தாள்; காதில் நூல்திரியை  இட அழைக்கிறாள் – இப்பாட்டில்.  காதுகுத்தி நூல்திரியை இட்டுக் காது பெருக்கியபின்பு காதணிகளையிடுதல் இயல்பு.  அழகும் = உம் – இசைநிறை.  “கனகக்கடிப்புமிவையாம்” என்றும் பாடம் கொள்ளலாமென்பர்.  கடிப்பு – கர்ணபூஷணம்.

English Translation

O Narayana! Forever you remain in the thoughts of those who worship you! Wearing a colorful coral band on your waist, and jingling ankle bells on your lotus feet, comes hither.  O Lord of beauty beyond imagination! I will insert the needle and thread without hurting you.  See, these golden earrings are beautiful, yes?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top