(141)

(141)

வையமெல் லாம்பெறும் வார்கடல் வாழும் மகரக் குழைகொண்டு வைத்தேன்

வெய்யவே காதில் திரியை யிடுவன்நீ வேண்டிய தெல்லாம் தருவன்

உய்யஇவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடராயர்கொ ழுந்தே

மையன்மை செய்துஇள வாய்ச்சிய ருள்ளத்து மாதவ னேஇங்கே வாராய்.

பதவுரை

உய்ய

–

(நாங்களெல்லாம்) உஜ்ஜீவிக்கும்படி
இ ஆயர் குலத்தினில் தோன்றிய

–

இந்த இடையர் குலத்திலே வந்து பிறந்த
ஒன் சுடர்

–

மிக்க ஒளியையுடைய
ஆயர் கொழுந்தே

–

இடையர்களின் கொழுந்து போன்றவனே!
வையம் எல்லாம் பெறும்

–

இந்தவுலகங்களையெல்லாம் (தனக்கு) விலையாகக் கொள்ளக்கூடிய
வார் கடல் வாழும் மகரம் குழை

–

பெரிய கடலிலே வாழ்கின்ற சுறாமீனின் வடிவமையச் செய்யப்பட்ட மகரக்குழையை
கொண்டு வைத்தேன்

–

(உன்காது பெருகியிடும்படி) கொண்டு வந்திருக்கிறேன்;
(உன் காதுக்குத் தினவு உண்டாகாமலிருக்கும் பொருட்டு)
வெய்யவே

–

வெம்மையுடனிருக்கும்படி
காதில் திரியை இடுவன்

–

(உன்) காதிலே திரியை இடுவேன்;
வேண்டியது எல்லாம்

–

நீ விரும்பிய பொருள்களை யெல்லாம்
தருவன்

–

கொடுப்பேன்;
மா தவனே

–

ச்ரியபதியே!
இன ஆய்ச்சியர் உள்ளத்து

–

மடமைப் பருவமுடைய இடைப்பெண்கள் மநிஸ்ஸலே
மையன்மை செய்து

–

வ்யாமோஹத்தைச் செய்துகொண்டு

இங்கே வாராய்:-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – நீ இப்போது திரியையிட்டுக்கொண்டால் பின்பு பொற்கடிப்பு மாத்திரமல்ல மிகச்சிறந்த மகாகுண்டலங்களையும் அணியலாம்; காது தினவு தின்னாமலிருக்க வெப்பமாகவே திரியையிடுவேன்; உனக்கு வேண்டிய பணியாரங்களையும் பழங்களையும் தருவேன்; நீ வரவேணும் என்று சொல்லி யழைக்கிறாள்.  வெப்பு தினவுக்குப் பரிஹாரமாதலால் ‘வெய்யவே காதில் திரியையிடுவேன்’ என்றாள்.

English Translation

O Madhava! O Radiant child born to deliver this cowherd clan! I have brought for you these ear-pendants in the shape of the deep-sea Makara fish, which all the world raves about.  You infatuate young cowherd-dames and live in their hearts.  I shall bore your ears quickly.  I will give you all that you ask for.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top