(127)

(127)

வல்லா ளிலங்கை மலங்கச் சரந்துரந்த

வில்லாளனைவிட்டு சித்தன் விரித்த

சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவைபத்தும்

வல்லார்போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே.

பதவுரை

வல்லாள்

–

பலசாலிகளான வீரர்களையுடைய
இலங்கை

–

லங்கையானது
மலங்க

–

பாழாம்படி
சரம் துரந்த

–

அம்பைச் செலுத்திய
வில் ஆளனை

–

வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி
விட்டுசித்தன்

–

பெரியாழ்வார்
விரித்த

–

பரக்ககூறிய
சொல் ஆர்ந்த

–

சொல் நிரம்பிய
அப்பூச்சி பாடல் இவை பத்தும்

–

அப்பூச்சி காட்டுதலைப் பற்றிய இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்

–

கற்கவல்லவர்
போய்

–

(அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய்
வைகுந்தம்

–

ஸ்ரீவைகுண்டத்திலே
மன்னி இருப்பர்

–

நித்யவாஸம் பண்ணப்பெறுவர்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – சொல்லார்ந்த பாடலிவை பத்தும் = இத்திருமொழியில் அர்த்தத்தைக் கவனிக்கவேணுமென்கிற கஷ்டமும் வேண்டா; சொல்லே பரமபோக்யம் என்று கருத்து.  இச்செய்யுள் வெண்டளையால் வந்த தரவுகொச்சகக் கலிப்பாவாதலால் “விட்டுசித்தன் விரித்தன” என்று பாடமானால் தளைக்குப் பொருந்தும்.  ??? – வடசொல்.

அடிவரவு:- மெச்சு மலை காயும் இருட்டு சேப்பூண்ட செப்பு தத்துக் கொங்கை பதகம் வல்லாள் அரவணை.

English Translation

This decad of Appuchi songs by Vishnuchitta sing the praise of the bow-wielding Lord who rained arrows and burnt the Rakshasa’s Lanka.  Those who master it will go and live in Vaikuntha forever.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top