(127)
வல்லா ளிலங்கை மலங்கச் சரந்துரந்த
வில்லாளனைவிட்டு சித்தன் விரித்த
சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவைபத்தும்
வல்லார்போய் வைகுந்தம் மன்னி யிருப்பரே.
பதவுரை
| வல்லாள் |
– |
பலசாலிகளான வீரர்களையுடைய |
| இலங்கை |
– |
லங்கையானது |
| மலங்க |
– |
பாழாம்படி |
| சரம் துரந்த |
– |
அம்பைச் செலுத்திய |
| வில் ஆளனை |
– |
வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி |
| விட்டுசித்தன் |
– |
பெரியாழ்வார் |
| விரித்த |
– |
பரக்ககூறிய |
| சொல் ஆர்ந்த |
– |
சொல் நிரம்பிய |
| அப்பூச்சி பாடல் இவை பத்தும் |
– |
அப்பூச்சி காட்டுதலைப் பற்றிய இப்பத்துப் பாசுரங்களையும் |
| வல்லார் |
– |
கற்கவல்லவர் |
| போய் |
– |
(அர்ச்சிராதிமார்க்கமாகப்) போய் |
| வைகுந்தம் |
– |
ஸ்ரீவைகுண்டத்திலே |
| மன்னி இருப்பர் |
– |
நித்யவாஸம் பண்ணப்பெறுவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – சொல்லார்ந்த பாடலிவை பத்தும் = இத்திருமொழியில் அர்த்தத்தைக் கவனிக்கவேணுமென்கிற கஷ்டமும் வேண்டா; சொல்லே பரமபோக்யம் என்று கருத்து. இச்செய்யுள் வெண்டளையால் வந்த தரவுகொச்சகக் கலிப்பாவாதலால் “விட்டுசித்தன் விரித்தன” என்று பாடமானால் தளைக்குப் பொருந்தும். ??? – வடசொல்.
அடிவரவு:- மெச்சு மலை காயும் இருட்டு சேப்பூண்ட செப்பு தத்துக் கொங்கை பதகம் வல்லாள் அரவணை.
English Translation
This decad of Appuchi songs by Vishnuchitta sing the praise of the bow-wielding Lord who rained arrows and burnt the Rakshasa’s Lanka. Those who master it will go and live in Vaikuntha forever.
