(126)

(126)

பதக முதலைவாய்ப் பட்ட களிறு

கதறிக்கை கூப்பிஎன் கண்ணாகண் ணாஎன்ன

உதவப்புள் ளூர்ந்து அங்குஉறுதுயர் தீர்த்த

அதகன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

பதகம்

–

பாதிக்குந் தன்மையையுடைய
முதலை

–

முதலையில்
வாய்

–

வாயிலே
பட்ட

–

அகப்பட்ட
களிறு

–

ஸ்ரீகஜேந்த்ராழ்வான்
கதறி

–

(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு
கை கூப்பி

–

கையைக் குவித்துக்கொண்டு
என் கண்ணா கண்ணா என்ன

–

என்னுடைய கண்ணனே! என்று பலகாலழைக்க
அங்கு

–

அப்போதே
உதவ

–

(அந்த யானைக்கு) உதவும்படி
புள் ஊர்ந்து

–

பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு சென்று
உறுதுயர்

–

(அந்த யானையின்) மிக்க வருத்தத்தை
தீர்த்த

–

போக்கின
அதகன்

–

(ஆச்ரிதாக்ஷணத்தில்) மிடுக்கையுடையவன்

வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – பதகம் – ஸாயக்ஷ என்ற வடசொல் விகாரம்; ??? என்பதன் (குறுக்கல்) விகாரமெனக் கொண்டால் (சாபமாகிற) பாபத்தையுடையவனென்று பொருளாம்.  உறுதுயர் – ப்ரயாஸப்பட்டுப் பறித்த பூ பயனற்றுப் போகின்றதே என்னுந் துயர்; “உயிர்போகிறதே” என்ற துயரன்று.  உறு – மிகுதியைக் குறிப்பதோர் உரிச்சொல்.  களிறு – யானையின் ஆண்மைப்பெயர்; (பெண்மைப் பெயர் – பிடி).  களி – மதக்களிப்பு; அதனையுடையது – களிறு எனக் காரணக்குறி; று – பெயர்விகுதி; ஒன்றன்பால் விகுதியெனக் கொள்ளலாகாது; பால்பகா அஃறிணைப் பெயராதலால்.  அதன் – ஹதகன்; ஆச்ரிதவிரோதியை ஹதம்பண்ணுமவன்.

English Translation

The elephant caught in the jaws of the vicious crocodile bellowed folded hands and cried, “Krishna, O My Krishna, Help!” My Lord and master drove his bird Garuda thither and saved him from distress.  He comes and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top