(125)

(125)

கொங்கைவன் கூனிசொற் கொண்டு

குவலயத் துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்

எங்கும் பரதற் கருளிவன் கானடை

அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

கொங்கை

–

(முதுகில்) முலையெழும்பினாற் போன்ற
வல்

–

பலிஷ்டமான
கூனி

–

கூனையுடையளான மந்தரையினுடைய
சொல்

–

சொல்லை
கொண்டு

–

அங்கீகரித்து
எங்கும்

–

எல்லாவிடங்களிலுமுள்ள
குவலயம் துங்கம்

–

இப்பூமியில் (இருப்பவற்றுள்) சிறந்தனவான
கரியும்

–

யானைகளையும்
பரியும்

–

(அங்ஙனொத்த) குதிரைகளையும்
இராச்சியமும்

–

ராஜ்யத்தையும்
பரதற்கு

–

பரதாழ்வானுக்கு
அருளி

–

கொடுத்துவிடல்
வல்கான் அடை

–

கொடியகாட்டை அடைந்த
அம் கண்ணன்

–

அழகிய கண்ணையுடையனான இவன்

அப்பூச்சி காட்டுகின்றான் ***

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ஒற்றுமைநயத்தால் ராமக்ருஷ்ணரிருவரையும் ஒருவராகவே கொண்டு ஆழ்வார் இங்ஙனருளிச் செய்கின்றனரென்க.  கொங்கை – கூனுக்கு அடைமொழி; வல் – கூனிக்கு அடைமொழி.  பெருமாளுடைய வந: ரைக்கு  மூலகாரணம் கூனியானமை பற்றிக் ‘கூனி சொற்கொண்டு’ என்றார்.  குவலயத்துங்கக்கரி – வடசொற்றொடர்.  இராச்சியம் – ???  வட சொல் திரிபு.  (அங்கண்ணன்) கண் – தயையாகவுமாம்; பட்டாபிஷேகத்துக்காகக் கட்டின காப்போடே காட்டுக்குப்போகச் சொன்னபோதும் முகங்கருகாமல் மலர்ந்து முடிதவிர்ந்து சடை புனைந்து நாட்டைவிட்டுக் காட்டுக்குப்போன பெருமாளுடைய மஹாகுணத்தை வியந்து அவனது தயையை அழகியதாகக் கொண்டாடுகிறபடி.

English Translation

Listening to the hard-hearted kuni’s words, the Lord of beautiful eyes went into the forest granting his prized elephants, steeds, kingdom and all else to Bharata.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top