(120)

(120)

காயும்நீர் புக்குக் கடம்பேறி காளியன்

தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி

வேயிங் குழலூதி வித்தகனாய் நின்ற

ஆயன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

காயும்

–

(காளியனுடைய விஷாக்நியால்) கொதிக்கின்ற
நீர்

–

மடுவின் ஜலத்திலே
புக்கு

–

புகுந்து (கலக்கி)

(அமமடுவினுள்ளிருந்த காளியனென்னும் பாம்பைக் கோபத்தோடு படமடுக்கச் செய்து)

கடம்பு ஏறி

–

(அம்மடுவின் கரையிலிருந்த) கடம்ப மரத்தின் மேலேறி
காளியன்

–

அந்தக் காளியனுடைய
தீய பணத்தில்

–

கொடிய படத்திலே
சிலம்பு ஆர்க்க

–

(தன் திருவடியிலணிந்து கொண்டிருந்த) சிலம்பு சப்திக்கும்படி
பாய்ந்து

–

குதித்து
ஆடி

–

கூத்தாடி

(இச்செய்கையைக் கண்டு என்ன தீங்கு வருமோ! என்று கலங்கினவர் மகிழ)

வேயின் குழல் ஊதி

–

மூங்கினாலானாகிய குழலை ஊதி
(இப்படி)

–

வித்தகன் ஆய் நன்ற

–

விஸ்மயரீயனாயிருந்த
ஆயன்

–

கண்ணபிரான்

வந்து *** அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – தீயபணம் = படம்.  விஷமிருத்தற்கு உரிய இடமாதலாலும் கோபத்தைத் தெரிவித்தலாலும்.

English Translation

The cowherd-lad entered the hot waters, climbed on to a Kadamba tree, leapt over the hoods of the venomous snake Kaliya, and danced as his anklets jingled merrily; playing his bamboo flute he stood like a wonder.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top