(121)

(121)

இருட்டில் பிறந்துபோய் ஏழைவல் லாயர்

மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப்

புரட்டிஅந் நாள்எங்கள் பூம்பட்டுக் கொண்ட

அரட்டன்வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பதவுரை

இருட்டில்

இருள்நிறைந்த நிடுநசியில்
பிறந்த

(மதுரையிலே) தேவகீ புத்ரனாகத் தோன்றி
போய்

(அங்குநின்றும் அப்போதே ஆய்ப்பாடிக்குப்) போய்
ஏழை

அவிவேகிகளான
வல்

(தன்னைப் பற்றியிருக்கும்) மனவலிமையையுடைய
ஆயர்

இடையர்களின் (கண்ணனிடத்திலுள்ள ப்ரேமத்தாலும் கம்ஸனிடத்திலுள்ள கோபத்தாலும் தாமே கம்ஸனைக் கொல்ல வல்லவர்கள் போலே செருக்கிச் சொல்லுகிற)
மருட்டை

மருள் வார்த்தைகளை
தவிர்ப்பித்து

போக்கினவனாயும்
வல் கஞ்சன்

கொடிய கம்ஸன்
மாள

மாண்டுபோம்படி
புரட்டி

(அவனை மயிரைப்பிடித்து அடித்துப் பூமியிலிட்டுப்) புரட்டினவனாயும்
அ நாள்

(நாங்கள் யமுனையில் நீராடிய) அக்காலத்திலே
எங்கள்

எங்களுடைய
பூ பட்டு

அழகிய பட்டுப்புடவைகளை
கொண்ட

வாரிக்கொண்டு போன
அரட்டன்

தீம்பனாயுமுள்ள கண்ணன்

வந்து அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – ‘பிள்ளை பிறப்பது எப்போது!’ என்று உருவின கத்தி உருவியபடி கம்ஸன் நிற்கையாலே அவனுடைய கண்ணிற்படாதபடி யிருக்கவேணுமென்று நள்ளிருளிலே தேவகீ புத்ரனாய்த் தோன்றி அப்போதே ஸ்ரீவஸஜதேவரை எடுத்துப்போம்படி கட்டளையிட்டுத் தேவகி தன்னைப்பிரியும் பிரிவால் கதறத்தான் திருவாய்ப்பாடியிற் புகுந்து வளர்ந்தருளின வரலாறு அறிக.  (ஆயர் மருட்டைத் தவிர்ப்பித்து) கம்ஸன் பூதநாதிகள் மூலமாகக் கண்ணனை நலிய நிலைத்திரா நன்றானென்றறிந்த இடையர்கள் தாங்களே கம்ஸனைக் கொல்வார் போலச் சில மருட்டு வார்த்தைகளைச் சொல்ல ‘நீங்களல்லாரும் வேணுமோ? நானே செய்வேன்’ என்று சொல்லித் தன் பேச்சாலே அவர்கள் அந்த மருட்டு வார்த்தைகளைச் சொல்லாதபடி  தவிர்ப்பித்து என்பது பொருள்.  மருட்டு – மருளை யுடையது;  அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினையாலணையும் பெயர்; ‘இருள்’ ‘மருள்’ என்ற பெயர்ச்சொற்களின் மேல் டு என்ற விகுதி ஏறப் பெற்றது; “துறுடுக்குற்றியலுகரவீற்ற ஒன்றன் படர்க்கை டுக்குறிப்பினாகும்” என்பது – நின்னூல்.  பூ + பட்டு = பூம்பட்டு “பூப்பெயர் முன்னின மன்மையுந்தோன்றும்” என்ற சிறப்புவிதி அறிக.

English Translation

He was born in the darkness of a dungeon.  He went to Mathura, dragged the evil Kamsa to death, and ended the misery of the good cowherd folk.  The naughty fellow stole our silk vestments one day.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top