(122)
சேப்பூண்ட சாடு சிதறி திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பதவுரை
| சேபூண்ட |
– |
எருதுகள் கட்டுதற்கு உரிய |
| காடு |
– |
சகடம் |
|
(அஸுராவேசத்தாலே தன்னைக் கொல்ல வர முலைக்காக அழுகிற பாவனையாலேதன் திருவடியைத் தூக்கி அச்சகடத்தை) |
||
| சிதறி |
– |
உருக்குலையும்படி உதைத்து |
| நெய்க்கு |
– |
நெய்க்கு ஆசைப்பட்டு |
| திருடி |
– |
களவுசெய்து |
| ஆப்பூண்டு |
– |
(உடைமைக்கு உரியவர் கையில்) அகப்பட்டுக் கொண்டு |
|
(அவர்கள் யசோதை கையிற் காட்டிக் கொடுக்க) |
||
| நந்தன் மனைவி |
– |
நந்தகோபன் தேவியான அவ் யசோதை |
| கடைதாம்பால் |
– |
(தயிரைக்) கடையும் தாம்பாலே (அடிக்க) |
| துள்ளி துடிக்க துடிக்க
துடிக்க சோப்பூண்டு |
– |
அள்ளி மிகவும் துடிக்கும் படி அடியுண்டு |
|
(அதனோடு நல்லாமல்) |
||
| அன்று |
– |
அக்காலத்தில் |
| ஆப்பூண்டாள் |
– |
(எங்கும் சலிக்கமுடியாதபடி உரலில்) கட்டுண்டவனுமாகிய கண்ணன் |
|
அப்பூச்சி காட்டுகின்றான் *** |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – சாடு – ‘சகடம்’ என்ற வடசொல்லின் சிதைவு. ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால் சோப்பூண்டு – ‘என் மகன் மேல் வீண் பழிவிளைத்திடேல்மின்; களவுகண்டதுண்டாகில் கையும்பிடியுமாய்ப் பிடித்துக் கொணருங்கள்’ என்று சொல்லிய தாயான தன்முன்பே ஆய்ச்சிமார் கண்ணனைக் கொண்டியோடே கண்டுபிடித்துக் கொணர அதுகண்ட யசோதை ‘நான் பிள்ளை பெற்று வளர்க்கிறது மிகவு மழகியதாயிருந்தது! ‘ என்று சொல்லித் தன்னைத்தானே மோதிக்கொண்டு அவர்கள் முன்றே தன் வயிற்றெரிச்சலெல்லாந் தோன்றும் படி அடிக்க அடியுண்டு என்றபடி. ஆப்பூண்டு சோப்பூண்டு ஆப்பூண்டான் – ‘ஆப்பூண்டு’ ‘சோப்புண்டு’ ஆப்பூண்டான் என்பவற்றின் நீட்டல் விகாரம்.
English Translation
Once he was caught stealing butter; Nanda’s wife tied up with a churning rope and beat him as he writhed in pain. He smote a loaded bullock cart to smithers. He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!
