(112)
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்
பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு
மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.
பதவுரை
| பண்டு |
– |
முன்னொருகாலத்திலே |
| வெண்கலம் பத்திரம் |
– |
வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை |
| கட்டி |
– |
(அரையிற்) கட்டிக்கொண்டு |
| விளையாடி |
– |
விளையாடி |
| பல கண் செய்த |
– |
பல பீலிக்கண்களைக் கொண்டு செய்யப்பட்ட |
| கரு தழை |
– |
பெரிய குடையாகிற |
| காலின் கீழ் |
– |
சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று) |
| பல பண் பாடி |
– |
(அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப் பாடிக்கொண்டு |
| பல்லாண்டு இசைப்ப |
– |
மங்களாசாஸநம் செய்ய |
| பல மண் கொண்டான் |
– |
பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன் |
|
புறம்புல்குவான்-; |
||
|
வாமனன் என்னை புறம்புல்குவான்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
பத்திரம் – வடசொல்; இலை என்பது பொருள்; வெண்கலத்தாலே இலைவடிவமாகச் செய்து குழந்தையினரையிற் கட்டுதல் முற்காலத்தில் ப்ராஹ்மணர்களின் வழக்கம்போலும். அங்ஙனமே வாமநாவதாரம் செய்த ஸ்ரீவிஷ்ணுவின் தன் திருவரையிலணிந்து கொண்டனனென்க; இனி முதலடியால் கண்ணபிரானது பால்யதசையில் லீலைவகையைச் சொல்லிற்றாகவுமாம். “கண்பலபெய்து” என்று பாடமாகில் கருந்தழை – பீலிப்பிச்சத்தினுடைய பல கண் – பல கண்களையும் பெய்து – தலையில் அணிந்துகொண்டு காலின் கீழ் விளையாடி – சோலைநிழலிலே விளையாடியென்று உரைக்க வேண்டும். பீலித்தழையைத் தலையிலே கட்டுகை ஜாதிக்கு உரிய செய்கையாம். மண் என்ற சொல் ஆகுபெயரால் பூமியைக் காட்டும்; அச்சொல் இங்கு உலகம் என்ற பொதுப்பொருளைத் தந்தது.
English Translation
The little Lord who plays and stands under the shade of trees, with a tuft of peacock feathers on his head and a silver fig leaf on his waist, praised with songs in many modes, came as Vamana then and took the Earth. He will embrace me from behind.
