(112)

(112)

வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி

கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்

பண்பல பாடிப்பல் லாண்டிசைப்ப பண்டு

மண்பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னைப் புறம்புல்குவான்.

பதவுரை

பண்டு

–

முன்னொருகாலத்திலே
வெண்கலம்  பத்திரம்

–

வெண்கலத்தினாற் செய்த பத்திரத்தை
கட்டி

–

(அரையிற்) கட்டிக்கொண்டு
விளையாடி

–

விளையாடி
பல கண் செய்த

–

பல பீலிக்கண்களைக் கொண்டு செய்யப்பட்ட
கரு தழை

–

பெரிய குடையாகிற
காலின் கீழ்

–

சோலையின் கீழேயிருந்து (மாவலியிடத்தில் மூவடி மண்ணை இரந்து பெற்று)
பல பண் பாடி

–

(அநுகூலரானவர்கள்) பலவித ராகங்களைப்  பாடிக்கொண்டு
பல்லாண்டு இசைப்ப

–

மங்களாசாஸநம் செய்ய
பல மண் கொண்டான்

–

பல (ஸகலமான) லோகங்களையுமளந்து தன்னதாக்கிக் கொண்ட இவன்

புறம்புல்குவான்-;

வாமனன் என்னை புறம்புல்குவான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

பத்திரம் – வடசொல்; இலை என்பது பொருள்; வெண்கலத்தாலே இலைவடிவமாகச் செய்து குழந்தையினரையிற் கட்டுதல் முற்காலத்தில் ப்ராஹ்மணர்களின் வழக்கம்போலும்.  அங்ஙனமே வாமநாவதாரம் செய்த ஸ்ரீவிஷ்ணுவின் தன் திருவரையிலணிந்து கொண்டனனென்க; இனி முதலடியால் கண்ணபிரானது பால்யதசையில் லீலைவகையைச் சொல்லிற்றாகவுமாம்.  “கண்பலபெய்து” என்று பாடமாகில் கருந்தழை – பீலிப்பிச்சத்தினுடைய பல கண் – பல கண்களையும் பெய்து  – தலையில் அணிந்துகொண்டு காலின் கீழ் விளையாடி – சோலைநிழலிலே விளையாடியென்று உரைக்க வேண்டும்.  பீலித்தழையைத் தலையிலே கட்டுகை ஜாதிக்கு உரிய செய்கையாம்.  மண் என்ற சொல் ஆகுபெயரால் பூமியைக் காட்டும்; அச்சொல் இங்கு உலகம் என்ற பொதுப்பொருளைத் தந்தது.

English Translation

The little Lord who plays and stands under the shade of trees, with a tuft of peacock feathers on his head and a silver fig leaf on his waist, praised with songs in many modes, came as Vamana then and took the Earth.  He will embrace me from behind.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top